உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., உளவாளியாக இருந்த பெல் இன்ஜினியர் கைது

பாக்., உளவாளியாக இருந்த பெல் இன்ஜினியர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட, பெங்களூரு, 'பெல்' நிறுவன மூத்த இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடகாவின் கார்வாரில் உள்ள, 'சீ பேர்டு' கடற்படை தளம் பற்றிய தகவல்களை, பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக அங்கு பணியாற்றிய தற்காலிக ஊழியர்களான வேதன் தண்டேல், அக் ஷய் நாயக் ஆகியோரை என்.ஐ.ஏ., இரு மாதங்களுக்கு முன் கைது செய்தது.இந்நிலையில், இந்திய ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக கடந்த 14ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றும் ரவீந்திர குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். குமார் விகாஷ் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.குமார் விகாஷிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரு பெல் நிறுவனத்தில் தயாரிப்பு, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு துறையில் மூத்த இன்ஜினியராக பணியாற்றும் உத்தர பிரதேசத்தின் தீப்ராஜ் சந்திரா, 36, என்பவரும் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டது தெரிந்தது.இதையடுத்து, பெங்களூரு மத்திகெரேயில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு, தீப்ராஜ் சந்திராவை ராணுவ புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.விசாரணையில், நாட்டின் பாதுகாப்பு குறித்த ரகசியங்கள், விண்வெளி ஆய்வு தொடர்பான சில தகவல்களை பாகிஸ்தானுக்கு தீப்ராஜ் கொடுத்தது தெரிந்தது. இதற்காக, பாகிஸ்தானிடம் இருந்து பிட்காயின் மூலம் பணம் வாங்கியதும் தெரியவந்தது. இவரிடம் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பேச்சு நடத்தி, தகவல்களை கறந்ததும் தெரிந்தது.இவர்கள், பாகிஸ்தான் பெண்ணிடம், 'ஹனிடிராப்'பில் சிக்கி இருக்கலாம் என்றும், இதனால், நம் நாட்டின் ரகசியங்களை கசியவிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.இதுகுறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mohamed Ibrahim
மார் 26, 2025 04:51

ஹனி டிராபும் இல்ல... பனி டிராபும் இல்ல.... பண டிராப்..... சங்கி இரத்தத்தில் ஊரியது ஆள் காட்டி வேலை.....


Ram Moorthy
மார் 22, 2025 02:20

தூக்கில் போடுங்கள் அடுத்த துரோகிகளுக்கு இது ஒரு பாடமாக அமையும்


Rajasekar Jayaraman
மார் 21, 2025 16:07

இவனை நடுத்தெருவில் வைத்து சுடவேண்டும் அப்போது தான் மாற்றவேர்களுக்கு பயம் வரும் அதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் அதை எதிர்க்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும்.


Sam Dev
மார் 21, 2025 12:14

இந்த அரசாங்கம் இவர்களை தண்டிக்கமாட்டாங்க ஏனென்றால் இவர்கள் இருவரும் யூபியை சேர்ந்தவர்கள் மற்றும் ஹிந்துக்கள் ஒருவேளை முஸ்லிமா இருந்திருந்தால் நிச்சயமா தூக்குதான்


subramanian
மார் 21, 2025 14:35

மகன்


Rajasekar Jayaraman
மார் 21, 2025 16:09

இது என்ன திமுக அரசு என்று நினைத்தீர்களா முட்டாளே.


Raman
மார் 22, 2025 13:37

200 op comment


Rasheel
மார் 21, 2025 11:21

அர்ரெஸ்ட் முக்கியமல்ல. வேலையில் இருந்து நீக்கி கடுமையான தண்டனை முக்கியம். அது நடக்க இன்னும் 100 ஆண்டுகள் ஆகும். அதுக்குள்ள எல்லாத்தையும் அனுபவித்து விட்டு பொய் சேர்ந்து விடுவார்கள்.


Sampath Kumar
மார் 21, 2025 08:19

பேரை பாரு


வாய்மையே வெல்லும்
மார் 21, 2025 15:59

உன்னோடபெயர் கூட ஹிந்து பெயர் அனால் உள்ளடி வேலை .. ஒவ்வொரு எழுத்திலும் சம்பபிராணி மணம்வீசும் ஹிந்துக்களுக்கு எதிராக பேசாத நாளே கிடையாது ..அப்படிப்பட்ட ஆளுங்களோட நேர்மையும் நோக்கமும் எள்ளி நகையாட தோணுது ..


Raman
மார் 22, 2025 13:39

200 ops ..


chennai sivakumar
மார் 21, 2025 08:11

Please hang him till death. Thats the punishment these sort of people deserve


mohan s
மார் 21, 2025 08:08

பாராட்டுக்குரிய நாட்டு தேசப்பற்று


Dharmavaan
மார் 21, 2025 07:16

வேதனை


தாமரை மலர்கிறது
மார் 21, 2025 02:40

பணத்தாசை


புதிய வீடியோ