மேலும் செய்திகள்
இரட்டை ரயில் பாதை
24-Sep-2024
பாலக்காடு:நாட்டின் முதல் புல்லட் ரயில் தயாரிக்கும் ஒப்பந்தத்தை, பி.இ.எம்.எல்., நிறுவனம் பெற்றுள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோட்டில் பொதுத்துறை நிறுவனமான, பி.இ.எம்.எல்., எனப்படும் 'பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்' நிறுவனம் செயல்படுகிறது. பெங்களூரு, மைசூரு, கோளார்கனி ஆகிய இடங்களில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.ஏராளமான மெமு ரயில் பெட்டிகள், பாசஞ்சர் ரயில் பெட்டிகள், ரயில் உபகரணங்களும் பாதுகாப்பு துறைக்கான உபகரணங்களும் தயாரித்து வரும் இந்த நிறுவனம், நாட்டின் முதல் புல்லட் ரயிலை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து, பி.இ.எம்.எல்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெளிநாட்டு நிறுவனங்களை தோற்கடித்து, உலகளாவிய டெண்டரில், இந்தியாவில் முதல் முறையாக, ரயில்வேயின் மும்பை - -அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பி.இ.எம்.எல்., பெற்றுள்ளது.புல்லட் ரயில் தயாரிப்பு பணிகளை முடித்து, 2026ல் ரயில்வேக்கு அளிக்கப்பட வேண்டும். எங்கு புல்லட் ரயில் தயாரிப்பது என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. பாலக்காடு, கஞ்சிக்கோட்டில் தான், புல்லட் ரயில் தயாரிப்படும் என, எதிர்பார்க்கிறோம்.இங்கு தான், ஏராளமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளிவரும். எட்டு பெட்டிகள் கொண்ட இரு புல்லட் ரயில்கள் தயாரிக்க ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. மணிக்கு, 250 கி.மீ., முதல் 280 கி.மீ., வேகத்தில் இந்த புல்லட் ரயில் இயங்கும்.ஒரு புல்லட் ரயில் தயாரிக்க, 250 கோடி ரூபாய் வரை செலவு எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் ரயிலை வெளி நாடுகளில் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கிடையில், எங்கள் நிறுவனம், வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டியை பாதி விலையில் உலகத் தரத்தில் தயாரித்து வழங்கியதால், இந்நிறுவனத்துக்கு புல்லட் ரயில் வாய்ப்பு கிடைத்துள்ளது.கடந்த மாதம், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், இந்திய ரயில்வேக்காக பி.இ.எம்.எல்., பெங்களூரு ஆலையில் வடிவமைத்து தயாரித்து வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ கார்ப்பரேஷனுக்காக, 210 மெட்ரோ பெட்டிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தையும் இம்மாதம் நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
24-Sep-2024