பெங்களூரு மத்திய சிறையில், டி.வி, மொபைல் போன் : எளிதாக உலாவும் பாலியல் வன்கொடுமை குற்றவாளி, கொலையாளிகள்!
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் கைதிகள், டி.வி, மொபைல் போன்கள் பயன்படுத்தி,கைதிகள் ஜாலியாக உலா வரும் வீடியோக்களால, அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில்,1996 முதல் 2022 வரை 20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களில் 18 பேரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரெட்டி, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட், 2022 ஆம் ஆண்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகக் குறைத்தது. ஆனால் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி கருணை மனு தாக்கல் செய்தது. இருப்பினும், மருத்துவ பரிசோதனைகளில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், ரெட்டி,இரண்டு ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஒரு கீபேட் மொபைலைப் பயன்படுத்துவதை ஒரு வீடியோ காட்டுவது, சிறை ஊழியர்களுக்குத் தெரியும் என்று கூறப்படுகிறது. மேலும் அறையில் டி.வி இருப்பதும் தெரிகிறது.ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தருண் ராஜுவின் படங்களும் வெளியாகின, அதில் அவர் சிறைக்குள் தொலைபேசியைப் பயன்படுத்தி சமைப்பதைக் காணலாம்.ஜெனீவாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது தருண் கைது செய்யப்பட்டார். மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் மகள் ரன்யா ராவுக்கு துபாயில் தங்கம் வழங்கியதாகக் கூறப்படும் தங்கக் கடத்தல் வலையமைப்பின் மூளையாக அவர் அடையாளம் காணப்பட்டார்.சிறைக்குள் மொபைல் போன்கள் மற்றும் வசதிகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில்,கர்நாடக முதல்வர் சித்தராமையா சம்பவங்களை விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.