உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொத்து வரி வசூலில் பெங்., மாநகராட்சி சாதனை

சொத்து வரி வசூலில் பெங்., மாநகராட்சி சாதனை

பெங்களூரு: நடப்பு நிதியாண்டு முடிவடைய, இன்னும் இரண்டரை மாதம் பாக்கியுள்ள நிலையில், சொத்து வரி வசூலில் பெங்களூரு மாநகராட்சி 83 சதவீதம் வரி வசூலித்து சாதனை செய்துள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில், 5,210 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 4,370 கோடி ரூபாய் வரி வசூலாகியுள்ளது. நிதியாண்டு முடிவடைய இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், 83 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக சொத்து வரி பாக்கி வைத்துள்ளோரிடம், வரியை வசூலிக்க 'ஒன் டைம் செட்டில்மென்ட்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் சலுகை கடந்தாண்டு நவம்பர் இறுதியில் முடிந்தது. தற்போது ஒவ்வொரு வாரமும் 10 முதல் 13 கோடி ரூபாய் வரி வசூலாகிறது. மார்ச் இறுதிக்குள் குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க திட்டமிட்டுள்ளோம்.சொத்து வரி வசூலிக்க, வருவாய் பிரிவு அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக வரி பாக்கி வைத்துள்ள சொத்து உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. வர்த்தக கட்டடங்கள் ஜப்தி செய்யப்படுகின்றன. கடந்தாண்டு இதே கால கட்டத்தில், பெங்களூரு மாநகராட்சியில் 3,480 கோடி ரூபாய் சொத்து வரி வசூலானது. நடப்பாண்டு 4,370 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வசூலாகியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Aravind
ஜன 19, 2025 20:50

ஊழலில் ஊறிய மாநகராட்சி தான் புரெஹ்த் பெங்களூரூ மகாநகர பாலிகே ????. சொத்து வரி வசூலில் சாதனை செய்துள்ளதாக பெருமையை பறைசாற்றிக் கொள்ளும் பெங்களூரூ மாநகராட்சி தரமான சாலை வசதிகள் செய்து தராமல் சாலையை பயன்படுத்தும் மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் சிரமமில்லாமல் செல்ல அகலமான சாலைகள் இல்லை. பூங்கா நகரம் என்றழைக்கப்பட்ட நகரம், துற்நூற்றம் வீசக்கூடிய ,குப்பை நகரமாக மாறிவிட்டது.மக்கள் சுகாதாயமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு தகுதியற்ற நரகரமாக மாறிவிட்டது.


Ramesh Sargam
ஜன 17, 2025 12:52

ஆனால் வீதிகளில் உள்ள குப்பைகளை அள்ளுவதில் பெங் ., மாநகராட்சி அக்கறை கொள்வதில்லை. ஒரு காலத்தில் இதே பெங்களூரு Pensioners Paradise என்று அறியப்பட்டது. இன்று குப்பைகூளங்களின் கிடங்கு என்று கூறலாம். பெங்களூரு வீதிகள் எல்லாம் குப்பை கிடங்குகளாக மாறிவிட்டன. சோதனை.