உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு நெரிசல் சம்பவம்; தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

பெங்களூரு நெரிசல் சம்பவம்; தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு; கர்நாடகாவில் சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் 2 இளம்பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற பிறகு பெங்களூரு அணியினர் நேற்று கர்நாடகாவுக்கு திரும்பினர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெங்களூரு அணி வீரர்கள், சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iymq89p3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெங்களூரு அணி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால், ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து கப்பன் பார்க் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரவர் குடும்பத்தினரிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் விபரம் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், இந்த கோர சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் 2 இளம்பெண்கள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த காமாட்சி, அக்ஷதா மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி திவ்யான்ஷி ஆகியோர் உயிரிழந்தனர். இதில், இளம்பெண் காமாட்சி,27, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளி தாளாளரின் மகள் ஆவார். இவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதேபோல, சிறுமி திவ்யான்ஷி,14, தன்னுடைய தந்தை சிவகுமார் மற்றும் தாய் அஸ்வினியுடன் சின்னசாமி மைதானம் சென்றிருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

theruvasagan
ஜூன் 05, 2025 17:26

சினிமா கூத்தாடிகளையும் கிரிக்கெட் சூதாடிகளையும் தலைமேல வைச்ச கொண்டாடுகிற அறிவுகெட்டத்தனம் எப்போது ஒழியுமோ அப்பதான் நாடு உருப்படும்.


உ.பி
ஜூன் 05, 2025 15:41

தலைவர் 10 லக்ஷம் தருவாரா


GoK
ஜூன் 05, 2025 13:15

வெள்ளைக்காரன் போயாச்சு ஆனால் அவன் ஆரமிச்சு வெச்சு விளையாட்டு மக்களை வெறி பிடிக்க வெச்சு உயிர், பனப்பலி எடுக்குது ஒரு 7, 8 உரிமையாளர்கள் பல கோடி ஆயிரங்கள் சம்பாதிங்கறாங்க ஒரு 200 பேரு விளையாடறவனுங்க நல்ல சம்பாதிங்கறாங்க மத்த மடயனுங்க லட்ச கணக்குல பணம் உயிரை கொடுக்கறானுங்க எங்கேஜ் போயி சொல்லறது இந்த முட்ட்டாள்தனத்தை


Seekayyes
ஜூன் 05, 2025 13:07

புத்திசாலிகளின் எதிர் வீட்டில் இருப்பவர்களே, எத்தனை பேருக்கு ஆட்டகாரர்ஆளை மிக அருகாமையில் காண பாக்கியம் கிடைத்தது?


D Natarajan
ஜூன் 05, 2025 12:36

நெரிசலில் ஒரு மரணம் அல்லு அர்ஜுன் கைது. இங்கே 11 பேர் மரணம் , யார் கைது ஆவர்


Anand
ஜூன் 05, 2025 13:38

சித்தராமையா, சிவகுமார்....


ஆரூர் ரங்
ஜூன் 05, 2025 11:50

ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு வேடிக்கை பார்க்க சென்ற பலர் மாடு முட்டி இறக்கிறார்கள். அப்போது செய்திகள் இவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை.


Krishnamurthy Venkatesan
ஜூன் 05, 2025 11:49

ஒரு வருடம் முழுதும் கொண்டாட வேண்டிய வெற்றியை ஒரே நாளில் ஊற்றி மூடி துக்க தினமாக மாற்றி விட்டார்கள். நம்மிடையே சினிமா வெறி, கிரிக்கெட் வெறி, அரசியல் வெறி இன்னும்பல இருக்கும்வரை இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க முடியாது. இவர்களுக்காக நான் பரிதாப பட மாட்டேன்.


Anand
ஜூன் 05, 2025 11:39

மதியிழந்து வெறி பிடித்து அலையும் கூட்டத்தை பார்த்தால் பேசாமல் கிரிக்கெட்டை தடை செய்யவேண்டும் என கோரிக்கை விடவேண்டும் என என்ன தோன்றுகிறது. ஓரளவுக்கு நாடும் உருப்படும்.


Veeraputhiran Balasubramoniam
ஜூன் 05, 2025 14:07

தடை செய்யப்பட வேண்டியவை கள்ள சாராயம், டாஸ்மாக் , லஞ்சம் , ஊழல், சில அரசியல் கட்சிகள், அனைத்து வியாபார நோக்க விளையட்டுகள், பல ஆயிரம் கோடி விளம்பரம், பல ஆயிரம் கோடி விளையாட்டு வீரர்கள் விலைக்கு விற்க்கப்பட்டால் அவர்கள் எப்படி சுதந்திரமாக விளையாடுவார்கள் காசு கொட்டி வாங்குபவர்கள் தோற்க்கும் படி சொன்னால் தோற்ப்பார்கள் ... அவ்வளவு தான இதை பார்க திரளும் ஞானம் இல்லா ஜனம் குழந்தைய வரை இது போன்ற கூட்டத்திற்க்கு போனால் சாவார்கள் தெரிந்துஅம் திருத்த முடியாத கூட்டம் முதல் நாள் திரப்படம் பார்க்கும் கூட்டம்...


Gentleman
ஜூன் 05, 2025 11:06

சாலையில் வாகனம் ஓட்டும் முறையை வைத்தே இந்தியர்களின் பொதுவெளி நடத்தையை அறியலாம். விமான சக்கரம் தரையை தொட்டவுடன் அடித்து பிடித்து எழுந்து நிற்பது மேலே உள்ள பெட்டியை எடுப்பது என நிதானம் அற்ற கூட்டமே மற்றும் அரசாங்க ஊழியர்கள் செய்யும் வேலை வைத்தே இவர்களை அறியலாம் ரயிலில் ஓஹ் என்று கத்தி பேசுவது அருகில் இருப்பவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் அவ்வளவுதான் நம் நாட்டிற்கு சாபகேடு உள்ளது நாம் வாழ்வதை விட்டு விட்டு அடுத்தவனை எப்படி அழிக்கலாம் என்று நினைப்பது


varadarajan
ஜூன் 05, 2025 11:50

I fully agree with your comments. Also I hate people play music loudly without using head phones, in public areas. Quite a lot of people do not respect others. Also we need to stop watching movies, and sports also not to get attract with useless celebrities.


T meenakshi sundaram
ஜூன் 05, 2025 11:03

தவிர்க்கப்பட வேண்டிய மரணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை