உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: பெங்களூரு போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்: விசாரணை கமிஷன் அமைப்பு

கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: பெங்களூரு போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்: விசாரணை கமிஷன் அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பெங்களூரு போலீஸ் கமிஷனர், கூடுதல் கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும்,ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.ஐ.பி.எல்., தொடரில் முதன்முறையாக கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு நேற்று சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது வீரர்களை பார்க்க 2 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஒன்று திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர். இது மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கர்நாடக ஐகோர்ட்டும் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இந்நிலையில், முதல்வர் சித்தராமையா கூறியதாவது: கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த விவகாரத்தில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா, கூடுதல் கமிஷனர், மைதான பொறுப்பாளர், மத்திய சரக துணை கமிஷனர், போலீஸ் நிலைய பொறுப்பாளர், கப்பன் பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

thanventh R
ஜூன் 06, 2025 08:57

இதில் சம்மதப்பட்ட அரசியல் வாதிகளுக்கு என்ன தண்டனை ? இறந்தவர்களின் ஆத்ம சும்மா விடாது


राज
ஜூன் 06, 2025 08:15

இந்த வெற்றிக்கு கர்நாடகக்காரர்கள் காரணம் அல்ல. கர்நாடக மாநிலத்தை சாராத மற்ற மாநிலங்கள் வீரர்கள் அயல்நாட்டு வீரர்கள் தான் காரணம். அப்படி இருந்தும் இவர்களுக்கு ஒரு வெறி கன்னட வெறி. சென்னை அணி ஐந்து முறை வெற்றியடைந்த போதும் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததா.


J.Isaac
ஜூன் 06, 2025 08:02

வெட்டி கூட்டம். நாட்டில், மிக முக்கியமான ஒழுக்க கல்வி குறைவதே இதற்கு காரணம்.


R Ramesh
ஜூன் 06, 2025 08:00

காவல் துறை கர்நாடக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டும்.


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 06, 2025 07:28

ஜெயா வுக்கு 100 கோடி தண்டம் என்று வரலாற்று தீர்ப்பு கொடுத்தவர் , ஜெயா கெஞ்சியும் தீர்ப்பை மாற்றி எழுதாதவர்


Anantharaman Srinivasan
ஜூன் 05, 2025 23:59

பெங்களூரு போலீஸ் கமிஷனர், கூடுதல் கமிஷனர், இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் நடந்த சம்பவத்திற்கு பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். முதல்வரும் துணைமுதல்வரும் இறுக நாற்காலியை பிடித்துக்கொண்டுள்ளனர்.


Perumal Pillai
ஜூன் 05, 2025 23:25

ஜான் மைக்கேல் டி.குன்ஹா. An honest judge. A rare and endangered species in India.


N Annamalai
ஜூன் 05, 2025 21:51

சோகம் .இழப்பு ஈடு செய்ய முடியாதது .அவ்வளவு பெரும் சிறு மனிதர்கள் .சாப்பிட வருகிறேன் ,பத்து நிமிடத்தில் வருகிறேன் ,வந்து வேலை செய்கிறேன் என்று கூறியவர்கள் இன்று இல்லை .


Krish_SI
ஜூன் 05, 2025 21:46

காங்கிரஸ் எளிமையாக தப்பிக்கும்


venugopal s
ஜூன் 06, 2025 17:44

கும்பமேளா விபத்துக்கு காரணமான உத்தரப் பிரதேச பாஜக அரசு தப்பியது போல் தானே?