உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு இளைஞர் தற்கொலை : உ.பி.க்கு ‛எஸ்கேப் ஆன மனைவிக்கு போலீஸ் அனுப்பியது சம்மன்

பெங்களூரு இளைஞர் தற்கொலை : உ.பி.க்கு ‛எஸ்கேப் ஆன மனைவிக்கு போலீஸ் அனுப்பியது சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : மனைவியின் பொய்யான வரதட்சணை புகார்களால் மன உளைச்சலில் பெங்களூரு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மனைவிக்கு போலீ்ஸ் சம்மன் அனுப்பியுள்ளது.தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணா என்பவர் தன் மனைவி மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள குடும்ப வன்முறை வழக்கில் கணவர் மீதும் அவருடைய குடும்பத்தார் மீதும் பெண்கள் புகார் கொடுப்பது அதிகரித்துள்ளது என கூறி மனைவியின் புகார்களை தள்ளுபடி செய்தனர்.இந்த தீர்ப்பு வெளியான போது பெங்களூரில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் அதுல் சுபாஷ், 34, சமீபத்தில் தற்கொலை செய்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து 24 பக்க கடிதமும், 90 நிமிட வீடியோவும் பதிவு செய்துள்ளார். அதில் தன் மனைவி நிகிதா சிங்கானி, அவரது பெற்றோர் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து துன்புறுத்தினர். 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதாக பொய் புகார் கொடுத்தார் என வீடியோவில் கூறியிருந்தார். இந்த வீடியோவும், கடிதமும் சமூக வலைதளங்களில் வெளியாகி, நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திஉள்ளது. இது குறித்து அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானி மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்மன் அனுப்பி மூன்று நாட்களுக்குள் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். தற்போது நிகிதா சிங்கானி பெங்களூருவில் இல்லை. சொந்த மாநிலமான உ.பி.யில் ஜூனான்பூருக்கு எஸ்கேப் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவரது இல்லத்தில் சம்மனை போலீசார் ஒட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 14, 2024 09:12

மனைவியால் எப்படித்தப்ப முடிந்தது ???? மனைவி மார்வா டி இனத்தைச் சேர்ந்தவராகத் தோன்றுகிறது ..... ஏன் அதில் பெண் எடுத்தார் ????


கத்தரிக்காய் வியாபாரி
டிச 14, 2024 01:23

இரண்டு பக்கமும் ஆஜரான வக்கீல்கள், மற்றும் நீதியரசரை உள்ள தூக்கி போட்டு நல்ல காய்ச்சின கம்பி எடுத்து....


SANKAR
டிச 13, 2024 23:57

kolayum seyvaal pathni is a famous dialogue in THOOKKUTHOOKI a Sivaji film!


vidhura
டிச 13, 2024 23:10

Education, job have made female possessing masculine qualities.. losing feminine qualities .cinema and media further brain wash for shortcut luxurious life ... simple, straight forward, honest and hardworking gents , husbands suffer in the hands of such arrogant women


ramesh krishnan
டிச 15, 2024 18:19

100% TRUE


சமீபத்திய செய்தி