மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
3 hour(s) ago | 10
பெங்களூரு: ஹிந்து அறநிலையத்துறையின் 'பாரத் கவுரவ்' யாத்திரை 18ம் தேதி துவங்குகிறது. ஆறு நாட்கள் யாத்திரையில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி உட்பட, வெவ்வேறு திருத்தலங்களை தரிசிக்கலாம்.இதுகுறித்து, ஹிந்து அறநிலையத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:ஹிந்து அறநிலையத்துறை சார்பில், 'கர்நாடக பாரத் கவுரவ்' யாத்திரை 18ல், துவங்குகிறது. ஆறு நாட்கள் யாத்திரையில் ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய திருத்தலங்களை தரிசிக்கலாம்.ராமேஸ்வரத்தில், ராமநாத சுவாமி கோவில், கன்னியாகுமரியில், ஸ்ரீபகவதி அம்மன் கோவில், மதுரையின் மீனாட்சி கோவில், திருவனந்தபுரத்தின், அனந்த பத்மநாபசுவாமி கோவில்களை தரிசிக்கலாம். ஒரு யாத்திரிகருக்கு 15,000 ரூபாய் கட்டணம். மாநில அரசு 5,000 ரூபாய் மானியம் வழங்கும். மீதமுள்ள 10,000 ரூபாயை யாத்திரிகர் வழங்கினால் போதும்.இந்திய சுற்றுலா வளர்ச்சி கார்ப்பரேஷன் இணையதளத்தில், டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 18ல், ரயில் புறப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3 hour(s) ago | 10