உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விலையில் ஏற்ற, இறக்கம் இல்லாததால் பாரத் அரிசி, கோதுமை திட்டம் ரத்து

விலையில் ஏற்ற, இறக்கம் இல்லாததால் பாரத் அரிசி, கோதுமை திட்டம் ரத்து

புதுடில்லி: சந்தையில் அரிசி, கோதுமை, பருப்பு ரகங்களின் விலை சீராக நீடிப்பதால், மலிவு விலை விற்பனைக்கான, 'பாரத் பிராண்டு' திட்டம் கைவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சமச்சீரற்ற பருவநிலை, சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், 2023 இறுதியில், அரிசி, பருப்பு ரகங்கள், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களின் சில்லரை விலை கடுமையாக அதிகரித்தது.விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, பாரத் பிராண்டு என்ற பெயரில், மானிய விலையில் உணவு தானியங்கள் விற்பனையை மத்திய அரசு துவக்கியது.

குறைந்த விலை

பின், 2024 ஜூன் மாதத்தில், பாரத் பிராண்டு பொருட்கள் விற்பனையை அரசு கைவிட்டது. எனினும், ஆண்டு இறுதியில் பண்டிகை சீசனை முன்னிட்டு, மீண்டும் குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்பட்டன.இதில் கடலை பருப்பு, துவரம்பருப்பு, அரிசி, கோதுமை ஆகியவை குறைந்த விலையில் வெளிச்சந்தையில் விற்பனை ஆகின்றன. 30,000 டன் கடலை பருப்பு மட்டும் இதற்காக அரசு கையிருப்பில் இருந்து, பாரத் பிராண்டு வாயிலாக வெளியிடப்பட்டது.

பணவீக்கம் வீழ்ச்சி

ஆனால், தற்போது உணவு தானிய உற்பத்தி அதிகரித்து, பணவீக்கம் அதிக வீழ்ச்சி கண்டுள்ளதால், சந்தையில் உணவு தானியங்களின் விலை சீரடைந்து, ஒரே அளவாக நீடிக்கிறது. இதையடுத்து, பாரத் பிராண்டு தானிய விற்பனையை கைவிட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.காரணம் என்ன?2024 ஏப்ரலில், 8.70 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், 2025 ஏப்ரலில், 1.78 சதவீதமாக சரிவுஉரிய பருவமழை எதிர்பார்ப்பால், கோதுமை, அரிசி, பருப்பு ரகங்களின் உற்பத்தி உயரும் எனக் கணிப்பு உணவு தானியங்களின் விலை உயர்ந்தால், பாரத் பிராண்டு பெயரில் விற்பனையை மீண்டும் துவக்க அரசு திட்டம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ராஜா
ஜூன் 10, 2025 20:16

சும்மா ஒரு உருட்டு தான் , பருப்பு வேகாது என்று நினைத்து கைவிட்டு விட்டார்கள் போல...


RAAJ68
ஜூன் 07, 2025 11:42

வெளிமார்க்கெட்டில் எப்போதும் அரிசி விலை ₹80 ₹70 பருப்பு வகைகள் 100 ரூபாய் 150 ரூபாய் 200 ரூபாய் என்று விற்கிறது புலளியின் விலை 400 ரூபாய் நல்லெண்ணெய் 450 ரூபாய் சமையல் என்னை 150 ரூபாய். என்ன விலை விற்றால் என்ன ஆட்சியாளர்களுக்கு கமிஷன் கிடைக்கிறதா அவ்வளவு தான்.


RAAJ68
ஜூன் 07, 2025 11:40

இப்படி ஒரு திட்டம் இருப்பதே எங்களுக்கு தெரியாது எப்போது வந்தது எங்கே கிடைத்தது விளம்பரமே இல்லையே. மக்கள் பயன் பெறும் வகையில் விளம்பரம் செய்து இருந்தால் நன்மை அடைந்து இருப்பார்கள்


Mecca Shivan
ஜூன் 07, 2025 07:22

உண்மையில் இந்த திட்டமே ஒரு தோல்வி ..அரிசியின் தரம் படு மோசம்


புதிய வீடியோ