உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் தேர்தல்: ரூ.108 கோடி மதிப்பு பணம், பொருட்கள் பறிமுதல்

பீஹார் தேர்தல்: ரூ.108 கோடி மதிப்பு பணம், பொருட்கள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அம்மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்கள், மதுபானத்தின் மதிப்பு 108 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.நவ.,6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதேநேரத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் உள்ளிட்டவையும் விநியோகிக்கப்படுகின்றன. இதனை தடுக்க தேர்தல் கமிஷனும் அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது. இவற்றை பறிமுதல் செய்வதற்கு என 824 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. புகார் கிடைத்த அடுத்த 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பறக்கும் படையினர் இன்று வரை நடத்திய சோதனையில் ரூ.108 கோடி மதிப்புக்கு பணம், போதைப்பொருள், பரிசுப்பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதில் ரூ.9.62 கோடி ரொக்கம்42.14 கோடி ரூபாய் மதிப்பு மதுபானம்(9.6 லட்சம் லிட்டர்)24.61 கோடி மதிப்பு போதை மருந்து5.8 கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள்ரூ.26 கோடி மதிப்பு இலவச பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான பிரச்னைகளை தெரிவிக்க 1950 என்ற எண் மூலம் தகவல் மையத்தை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

duruvasar
நவ 04, 2025 09:29

இதிலேயும் தமிழகம் தான் முதன்மை மாநிலம். விவரங்களுக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் கேளுங்கள்.


M Ramachandran
நவ 04, 2025 07:34

இந்த பணம் தமிழ்நாட்டு ஆளும் அரசியல் வாதிகளுக்கு ஜுஜுபி.


Baskar
நவ 04, 2025 07:01

இதெற்கெல்லாம் காரணம் வங்கி அதிகாரிகளே


Indhuindian
நவ 04, 2025 04:52

யாரோட பணம்னு வெளியிலே சொல்லமாட்டாங்க திருடனுக்கு தேள் கொட்டினாமாதிரி. ஏன் நம்ம வூர்லே வேலூருக்கு பக்கத்துக்கு வூர்லே இதே மாதிரி பிடிபட்டப்போ அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லேன்னு சத்தியம் பண்ணலயா? அரசியலிலே அதுவும் தேர்தல் சமயத்துல இதெல்லாம் சாதாரணமப்பா


Kasimani Baskaran
நவ 04, 2025 04:09

திருமங்கலம் சூத்திரம் வடமாநிலங்களில் கூட பிரபலம் போல தெரிகிறது..


Venugopal S
நவ 03, 2025 22:58

எந்தக் கட்சியினரிடம் இருந்து என்ற விபரம் இல்லாமல் இருப்பதைப் பார்த்தால் பாஜகவினர் என்று புரிகிறது!


சாமானியன்
நவ 03, 2025 21:56

தேர்தல் கமிஷன் மேலும் தீவிரப்படுத்தி மற்றும் சில நூறு கோடிகளை அள்ளனும். தமிழ்நாட்டில் கூட அள்ள நிறைய இருக்கு.


M Ramachandran
நவ 03, 2025 21:53

அஙகுள்ள அரசியல் வாதிகள் நம் தமிழகத்தின் ஆளும் கட்சியினரை விட ஏழைகள்.


Mr Krish Tamilnadu
நவ 03, 2025 20:58

இந்த பணத்தை வைத்து 4320 பேருக்கு வருஷ சம்பளம் 2.5 லட்சம் என சம்பளம் கொடுக்கலாமே


Anantharaman Srinivasan
நவ 03, 2025 20:31

பீஹார் தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரூ.108 கோடி மதிப்பு பணம், மதுபானம் போதைபொருட்கள் எந்த அரசியல் கட்சியதும் கிடையாது. ஒருவேளை நடு ரோடில் கிடந்திருக்கும். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் பூனைக்கும் காவல் பாலுக்கும் தோழன். மத்தியரசும் மௌனம். ஆளும் கட்சியும் சளைத்த தல்ல. தன்பங்குக்கு புகுந்து விளயாடும்.


புதிய வீடியோ