உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெயர் மாறும் கயா நகரம்: பீஹார் அமைச்சரவையில் ஒப்புதல்

பெயர் மாறும் கயா நகரம்: பீஹார் அமைச்சரவையில் ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: கயா நகரை, கயாஜி என பெயர் மாற்றம் செய்ய பீஹார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பீஹாரில் முக்கிய சுற்றுலாத்தலமாக அறியப்படுவது கயா நகரம். உலக புகழ்பெற்ற புத்த தலமாகவும் போற்றப்படுகிறது. இந்த சுற்றுலாத்தலத்தின் பெயரை மாற்றம் செய்ய பீஹார் அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் கூடிய அமைச்சரவையில இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.இனி அந்த பெயர் கயா ஜி என்று அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவையில் அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், வரலாறு மற்றும் மதம் முக்கியத்துவம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் பீஹார் கூடுதல் தலைமை செயலாளர் சித்தார்த் கூறி உள்ளார்.ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கயாவிற்கு வருகை தந்து, மூதாதையர்களின் ஆத்மாவுக்கு பிரார்த்தனை செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

எஸ் எஸ்
மே 17, 2025 08:49

கயா சுற்றுலா தலம் அல்ல. ஹிந்துக்களின் முக்கிய புண்ணிய தலம். இங்கு முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்வது ஹிந்துக்களின் கடமைகளுள் ஒன்று. தான் பெற்ற பிள்ளைகளில் ஒருவனாவது இங்கே வந்து நமக்கு திதி கொடுக்க மாட்டானா என்று பெற்றோர் ஆன்மா எதிர்பார்க்கும் என்பது நம்பிக்கை.


முக்கிய வீடியோ