9வது முறையாக தொடர் வெற்றி: பீஹார் அமைச்சர்கள் சாதனை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ள பா.ஜ.,வின் பிரேம் குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் பிஜேந்திர பிரசாத் யாதவ் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக எம். எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளனர். தற்போது நிதிஷ் அமைச்சரவையில் கூட்டுறவு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ள பா.ஜ.,வின் பிரேம் குமார், கயா தொகுதியில் போட்டியிட்டார். இதே போல், மின் துறை அமைச்சராக உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் பிஜேந்திர பிரசாத் யாதவ் சுபால் தொகுதியில் போட்டியிட்டார். இவர்கள் இருவரும் 1990ல் இருந்து தொகுதி மாறாமல் கயா மற்றும் சுபாலில் இருந்து போட்டியிட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒன்பதாவது முறையாக அதே தொகுதிகளில் போட்டியிட்ட இவர்கள், இந்த முறையும் பல ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.