உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்பிக்கை வைத்து வாக்கு அளித்தவர்களுக்கு தலைவணங்குகிறேன்; நிதிஷ்குமார் நன்றி

நம்பிக்கை வைத்து வாக்கு அளித்தவர்களுக்கு தலைவணங்குகிறேன்; நிதிஷ்குமார் நன்றி

பாட்னா: அரசு மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கும், பிரதமர் மோடியின் ஆதரவுக்கும் நன்றி என்று நிதிஷ்குமார் கூறி உள்ளார்.பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை பாஜ, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கொண்டாடி வருகின்றன. சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார், மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; 2025ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் எங்கள் அரசின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையை வைத்து அதை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும், தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியிடம் இருந்து கிடைத்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறேன். நமது முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தியதின் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி மிக பெரும் பெரும்பான்மையை பெற்றிருக்கிறது.மகத்தான இந்த வெற்றிக்கு, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களான சிராக் பாஸ்வான், ஜிதன்ராம் மஞ்ஜி, உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுடன் பீஹார் மேலும் முன்னேறும். நாட்டின் வளர்ந்த மாநிலங்களில் பீஹாரும் விரைவில் இடம்பெறும்.இவ்வாறு நிதிஷ்குமார் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மனிதன்
நவ 14, 2025 22:07

அப்படின்னா தேர்தல் கமிஷனுக்குத்தான் தலை வணங்கணும்... அமித்ஷாவுக்கும் எல்லோரின் பார்வையையும் டெல்லிக்கு திருப்பிவிட்டு இங்கே தான் செய்யவேண்டியதை கட்சிதமாக செய்து தந்தார்...


Rajah
நவ 14, 2025 21:33

பீஹார் மக்களுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்களுக்கும் முன்கூட்டியே வாழ்த்துகள்.


Saai Sundharamurthy AVK
நவ 14, 2025 21:26

நிதிஷ்குமார் நிச்சயம் ஒரு அதிர்ஷ்டக்காரர் தான். அந்த முதலமைச்சர் நாற்காலியில் பசை மாதிரி ஒட்டிக் கொண்டிருக்கிறார்.


RAMESH KUMAR R V
நவ 14, 2025 20:58

பீகார் மக்களுக்கு நல்லாட்சிக்கு மீண்டும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி.


Sun
நவ 14, 2025 20:56

இனி பீகாரில் எனக்கும் அவருக்கும் தான் போட்டியே ! ஆமா ஹைதராபாத்திலே இருந்து எங்க அண்ணே வந்திருக்கார்! ஆமா அந்த ஓவைசி அண்ணனுக்கும் எங்களுக்கும்தான் பீகாரில் இனி போட்டியே! இப்படி காங்கிரஸ் ,ராகுல் அறிவிக்கக் கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை.


veeramani
நவ 14, 2025 20:48

இந்தியாவின் சீனியர் அரசியல் தலைவர் நிதிஷ்குமார் ... இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என தூங்காமல் அரசியல் நடத்தும் மக்களின் தலைவர் மோடி ஜி . உங்கள் இருவரின் மக்கள் சேவைக்கு புகார் மக்கள் இதை கனிந்து அளித்த பரிசு ...இமாலய வெற்றி


SULLAN
நவ 14, 2025 21:20

இனிமேதானே கூத்தே இருக்கு ?? அதை பார்க்கத்தானே இந்த தலைவனே காத்துகிட்டு இருக்கேன் ...ஹா ஹா .


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி