உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேபாளம் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் 3 பேர்: பீஹாரில் போலீசார் உச்சகட்ட உஷார் நிலை!

நேபாளம் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் 3 பேர்: பீஹாரில் போலீசார் உச்சகட்ட உஷார் நிலை!

பாட்னா: பீஹாரில் ஜெய்ஷ்-இ -முகமது பயங்கரவாதிகள் 3 பேர் நேபாளம் வழியாக ஊடுருவியதால், போலீசார் உச்சகட்ட உஷார் நிலையில் உள்ளனர். இந்த மூன்று பயங்கரவாதிகளும் ஹஸ்னைன் அலி, அடில் உசேன் மற்றும் முகமது உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்க ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qv6vvvb2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற குழுக்களுடன் தொடர்புடைய பல பயங்கரவாத முகாம்களை பாதுகாப்பு படையினர் தாக்கினர். இந்தியத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.சில தினங்களுக்கு முன், எந்த பயங்கரவாதியும் தப்பிக்க முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில், பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக பீஹார் மாநிலத்திற்குள் ஜெய்ஷ்-இ -முகமது பயங்கரவாதிகள் 3 பேர் நுழைந்ததாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.இந்த தகவலை அடுத்து, பீஹார் போலீசார் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளின் வரைபடத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அவர்கள் ராவல்பிண்டியைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டைச் சேர்ந்த அடில் உசேன் மற்றும் பஹாவல்பூரைச் சேர்ந்த முகமது உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த பயங்கரவாதிகள் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு வந்த பிறகு, பீஹாருக்குள் நுழைந்தது விசாரணையில் தெரியவந்தது. இதன் காரணமாக, அனைத்து ரயில் நிலையம், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணியும் முழு வீச்சில் நடக்கிறது.சன்மானம்இவர்களைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

பேசும் தமிழன்
ஆக 28, 2025 22:12

நன்றாக விசாரியுங்கள்.... நேபாளம் வழியாக உள்ளே வந்து.... தமிழ் நாட்டில் பதுங்கி இருக்கப் போகிறார்கள்.... அவர்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழ் நாடு தான்.


Rathna
ஆக 28, 2025 20:00

எதிர் கட்சிகள் இவர்களுக்கு தகுந்த சூழ்நிலையை உண்டாக்கி தருகிறார்கள். தீவிரவாதிகளுக்கு குரல் கொடுப்பது முதல் முக்கியமான வக்கீல்கள் சப்ளை வரை போலி செகுலரிஸ்ம் என்ற போர்வையில் நடக்கிறது. ஜாமீன், பரோல் பரிசாக வழங்குவது, தண்டனை முடியும் முன்னே விடுதலை செய்வது தான் இதற்கு முக்கிய காரணம். இதை தவிர பாக்கிஸ்தான் பார்டரை போல, நேபாளம், பர்மா பார்டரை பலப்படுத்தாதது மத்திய அரசின் கவனம் இன்மயையை தெளிவாக்குகிறது. பங்களாதேஷில் மற்றும் நேபாள பார்டரில் மிக பெரிய ஜிஹாதி பேக்டரி உருவாவதை மத்திய மாநில அரசுகள் கவனிக்க வேண்டும். வங்காளம், பீகார் சில காலம் முன்னால் வரை எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வோட்டு வங்கிக்காக இதை கோட்டை விடுவது காலம் காலமாக நடக்கிறது. 1 இறந்த தீவிரவாத உடல்களை ஒப்படைக்காதே. 2. இறந்தவனை எரியூட்டு 3. மதம் கடந்து இறுதி சடங்குளை பெண்களால் செய். அப்பாவிகளை கொல்பவனுக்கு இதுவே பரிசு.


V RAMASWAMY
ஆக 28, 2025 14:31

இந்த ஜெய்ஷே மொஹமட், லாஷ்கர் எ தொய்பா போன்ற பயங்கரவாத தீவிரவாத அமைப்புக்கள் ஒழிக்கப்பட்டால் தான் பாகிஸ்தான், பாரதத்தில் அமைதி கண்டு முன்னேற்றம் காணமுடியும்.


Venkatesan Srinivasan
ஆக 28, 2025 16:05

பயங்கரவாதிகளை பிடித்தால் விசாரணை என்ற செய்தி வேண்டாம் நம் மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு சோறு போடும் துயரம் வேண்டாம். அவர்களை கொன்ற செய்தி மட்டுமே வெளியிட்டால் போதும்.


N Sasikumar Yadhav
ஆக 28, 2025 13:47

பாகிஸ்தானிய பயங்கரவாத இசுலாமிய கும்பல்களை வேரடி மண்ணோடு அழித்தால்தான் பாரதம் அமைதியாக இருக்கும்


Siva Balan
ஆக 28, 2025 13:45

பீஹாரில் பேரணி நடத்தியதே தீவிரவாதிகளை ஊடுருவ வைப்பதற்கே. மூன்று வாரிசுகளுமே இந்தியர்கள் சாகவேண்டும் என்று நினைப்பவர்களாயிற்றே...


raja
ஆக 28, 2025 13:42

இன்னுமா அந்த தீவிர பயங்கர வாதிகள் பிஹாரில் இருப்பானுவொன்னு நம்புறீங்க...அப்படியே ஸ்ட்ரைக்ட்டா அவனுவோ தொப்புள் கொடி உறவுக்காரன் எங்க ஆளும் பகுதிக்கு வாங்க...வந்து தேடுங்க .. கிடைக்க நூறு சத்தம் வாய்ப்பிருக்கு...


Abdul Rahim
ஆக 28, 2025 13:31

எல்லை பாதுகாப்பு பல்லை இளிக்கிறது இதை கேள்வி கேட்பவர்கள் தேசத்துரோகிகளாவார்கள் அப்படித்தானே ??


sri
ஆக 28, 2025 13:51

are you a patriotic, I doubt go to arivalayam and get 200


சந்திரன்
ஆக 28, 2025 17:50

இந்தியாவின் உப்பை தின்னும் எந்த ஒரு பாயாவது இந்த பயங்கரவாதிகள காட்டிகொடுக்க சொல் பார்க்கலாம் உன்ன மாதிரி தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் நபர்கள் உள்ள வரை ஊடுருவல் நடக்கும்தானே. இதையும் முறியடித்து உங்களையும் ராணுவம் காப்பாத்தனும் அதுதானே


Abdul Rahim
ஆக 28, 2025 13:12

ஒட்டு திருட்டை எதிர்த்து பிஹாரில் நடைபெற்ற பேரணி பெற்ற மாபெரும் வெற்றி இப்போது பாஜகவின் தூக்கத்தை கெடுத்துவிட்டது இனி வழக்கம் போல தேர்தல் நேரங்களில் அவிழ்த்து விடப்படும் பயங்கரவாத செய்திகள் நிறைய வரும் ,இப்போது வந்த இந்த விழிப்பு ஏன் இவர்கள் நுழைந்தபோது நேபாள இந்திய எல்லையில் இருக்கும் ராணுவத்திற்கு வரவில்லை ???? அப்படி என்றால் இந்த தோழ்விக்கு மேதகு ராணுவ அமைச்சர் பொறுப்பேற்பாரா ??? அது என்னங்கா எப்போவாவுமே உள்ளே வரவிட்டுட்டு அப்புறம் உங்க வீர தீர செயல்கள விளம்பரம் செயிரிங்க ???


G Mahalingam
ஆக 28, 2025 13:38

அமைதி மார்க்கம் என்று யார் பெயர் வைத்தது என்று தெரியவில்லை.


sri
ஆக 28, 2025 14:00

I don't know how you can say this, anyway you got 200 today for this comment keep doing the great work


Abdul Rahim
ஆக 28, 2025 15:02

நீ போ கமலாலயத்துக்கு


Sri
ஆக 28, 2025 20:19

Abdul Rahim, ensure younhave valid citizenship proof with you, go to the hell man, meaning gobto Pakistan or Turkey or Azerbijan , it would be good fit for you to live, btw I am at Kamalalayam as an Indian citizen, you can't say so, can you , go get another 200 for your comments


VSMani
ஆக 28, 2025 13:08

இந்த பயங்கரவாதிகள் நம் நாட்டில் நாசவேலைகளை செயும்முன் பிடிப்பது நல்லது.


Anand
ஆக 28, 2025 13:07

ரவுல், தொளபதி, ரேவந்த் ஆகிய மூவரும் அங்கு சென்றுள்ளார்கள்..


சமீபத்திய செய்தி