உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாத் பண்டிகை முடிந்ததும் தேர்தல் பீஹார் அரசியல் கட்சிகள் கோரிக்கை

சாத் பண்டிகை முடிந்ததும் தேர்தல் பீஹார் அரசியல் கட்சிகள் கோரிக்கை

புதுடில்லி: பீஹாரில், 'சாத்' பண்டிகை முடிந்த பின், சட்டசபை தேர்தலை நடத்தும்படி, தேர்தல் கமிஷனுக்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு வரும் நவம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்குப் பின் வரும் சாத் பண்டிகையையும், அம்மாநில மக்கள் வெகு உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு சாத் பண்டிகை அக்டோபர் இறுதி வரை கொண்டாடப்படவுள்ளது. இதனால், தேர்தலை நடத்துவது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆறு தேசிய கட்சிகள் மற்றும் பீஹாரில் உள்ள மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் சாத் பண்டிகைக்குப் பின் தேர்தலை நடத்தும்படி கோரிக்கை விடுத்தன. மேலும், நிறைய கட்டங்களாக தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !