வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீளுமா அல்லது அவர்களின் ஈடுபாடு இன்னமும் கூடுமா?
வரவேற்க்கத்தக்க நடவடிக்கை ....
புதுடில்லி:விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில், 'தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா - 2025' லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. விளையாட்டு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதுடன், நிர்வாக பொறுப்பு மற்றும் வீரர்களின் நலனை மேம்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கம். இதை, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், அனைத்து விளையாட்டு அமைப்புகளும் ஒருங்கிணைந்த நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். விளையாட்டு கூட்டமைப்புகள் எடுக்கும் முடிவுகளில் வெளிப்படைத்தன்மை உருவாக்கப்படும். வீரர்களின் தேர்வை ஒழுங்குமுறைப்படுத்துவது, தகுதி அடிப்படையில் தேர்வை உறுதி செய்வது போன்றவை ஏற்படுத்தப்படும். இதுதவிர, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க குழுக்களை அமைக்க முடியும். இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் உட்பட அனைத்து விளையாட்டு கூட்டமைப்புகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீளுமா அல்லது அவர்களின் ஈடுபாடு இன்னமும் கூடுமா?
வரவேற்க்கத்தக்க நடவடிக்கை ....