மேலும் செய்திகள்
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
4 hour(s) ago | 38
கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்
8 hour(s) ago | 4
பார்லியில் குரங்கு தொல்லை; சபாநாயகர் திண்டாட்டம்
14 hour(s) ago | 19
ராம்நகர்: ''கர்நாடகாவுக்கு நிதியுதவி வழங்குவதில், மத்திய அரசு நிரந்தரமாக அநியாயம் செய்கிறது. தற்போதுள்ள பா.ஜ., - எம்.பி.,க்கள் யாரும் ஆண்கள் அல்ல,'' என மாகடி காங்., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தெரிவித்தார்.ராம்நகரில் நேற்று அவர் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி முன், பா.ஜ., - எம்.பி.,க் கள் யாரும், அமர்வதும் இல்லை; எழுவதும் இல்லை. மோடி பெயரை கூறி வெற்றி பெறுகின்றனர். யாருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை.கர்நாடக பா.ஜ., - எம்.பி.,க்கள், மாநிலத்துக்கு ஆதரவாக குரல் எழுப்புவது இல்லை. இவர்கள் யாரும் ஆண்கள் இல்லை என்றே அர்த்தம். எனவே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். எங்களை பார்த்தாவது, அவர்கள் போராட்டம் நடத்துகின்றனரா என்பதை, பார்க்க வேண்டும்.அண்டை மாநிலமான தமிழகம், தன் உரிமைக்காக நடத்தும் போராட்டத்தை பார்த்து, பா.ஜ.,வினர் கற்றுக்கொள்ளட்டும். இவர்கள் ஷோ பீஸ்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago | 38
8 hour(s) ago | 4
14 hour(s) ago | 19