ஆம் ஆத்மிக்கு பா.ஜ., அதிர்ச்சி
சாணக்யாபுரி:சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக நான்கு ஆம் ஆத்மி தலைவர்கள், நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர்.பஜன்புராவைச் சேர்ந்த கவுன்சிலர் ரேகா ராணி, கியாலாவைச் சேர்ந்த கவுன்சிலர் ஷில்பா கவுர் ஆகியோர் நேற்று பா.ஜ., தலைவர்கள் ஹர்ஷ் மல்ஹோத்ரா, மனோஜ் திவாரி, கமல்ஜீத் செஹ்ராவத் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.அவர்களுடன் கோண்டாவின் முன்னாள் எம்.எல்.ஏ., ஸ்ரீதத் சர்மா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்கின் பார்லிமென்ட் பிரதிநிதி சவுத்ரி விஜேந்திரா ஆகியோரும் பா.ஜ.,வில் இணைந்தனர்.சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ., அதிர்ச்சியை அளித்துள்ளது.