உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொறுப்பற்ற நிர்வாகத்தால் உயிரிழப்பு: கர்நாடக அரசு மீது பா.ஜ., குற்றச்சாட்டு

பொறுப்பற்ற நிர்வாகத்தால் உயிரிழப்பு: கர்நாடக அரசு மீது பா.ஜ., குற்றச்சாட்டு

பெங்களூரு: '' கர்நாடக காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற நிர்வாகத்தால் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்'', என பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பைனலில் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க வந்த வீரர்களை பார்ப்பதற்காக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gta5dsg7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு மன்னிப்பு கோரி உள்ள அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அளவுகடந்த ரசிகர்கள் கூட்டத்தால் உயிரிழப்பு ஏற்பட்டது. இதற்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் தடியடி நடத்த முடியவில்லை. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தும் உயிரிழப்பு ஏற்பட்டது என தெரிவித்தார்.இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில பா.ஜ., வெளியிட்ட அறிக்கையில், ' முதல்வரும், துணை முதல்வரும் செல்பி எடுப்பதிலேயே கவனம் செலுத்தினர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. உரிய முன்னேற்பாடு செய்யாமல் அவசரப்பட்டு விட்டது. பொறுப்பு அற்ற நிர்வாகத்தால் 11 பேர் உயிரிழந்து விட்டனர்' எனத் தெரிவித்து உள்ளது.பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறுகையில், அவசர அவசரமாக வெற்றி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கர்நாடக அரசு முன்னேற்பாடு செய்யவில்லை. இதற்கு முதல்வர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை தேவை. இவ்வாறு அவர் கூறினார்.சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவரும் பா.ஜ.,வைச் சேர்ந்த சலவாடி நாராயணசுவாமி கூறுகையில், '' அரசால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. எத்தனை பேர் வருவார்கள் ? என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. பாதுகாப்பில் தோல்வி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
ஜூன் 04, 2025 21:42

கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜெய் ஷா பொறுப்பேற்க மாட்டார். ரிஷியோட உக்காந்து மேட்ச் பாப்பாரு. டிக்கெட் வித்து வந்த காசையெல்லாம் வாரிப் போட்டுப்பாரு.


NARAYANAN
ஜூன் 04, 2025 21:05

கூட்டத்திற்கு எப்போதும் அறிவு இருந்ததாக வரலாறு இல்லை. அரசியலாக்காதீர்கள். GROUD HAS NO MIND.


Balaa
ஜூன் 04, 2025 20:37

Why should a Government celebrate a private clubs victory. This is not Karnataka state team winning Ranji Trophy or Indian team winning World Cup. This is a tournament of private teams, owned by large corporates / HNIs. The Government should only facilitate, collect their revenues and stay away from aligning with this. Ridiculous case of flattery. Shame on our hypocritic mindset.


Balaa
ஜூன் 04, 2025 20:31

Literate not educated crooks thronging the stadium.


Balaa
ஜூன் 04, 2025 20:29

No dirty politics on this issue. This happens in every State & everywhere across the world. Few days back it happened in Paris, after PSG won the CL. The main cause is the uncivilised, unruly & selfish behaviour of the mob. People are becoming more selfish these days. Children are pampered. Its a rot affecting our lifestyle tem.


Ramesh Sargam
ஜூன் 04, 2025 20:00

நாட்டை காப்பாற்றிய பஹல்காம் வீரர்களுக்கு இப்படி வரவேற்பு கொடுக்க வில்லை. கோடிகளில் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு மாபெரும் வரவேற்பு. நேற்று விழாக்கோலம். இன்று பயங்கர சோகம். இப்படிப்பட்ட ஒரு ஏற்பாடு தேவையா? பொறுப்பில்லாமல் இந்த ஏற்பாடு செய்த காங்கிரஸ் ஆட்சி கலைக்கப் பட வேண்டும்.இதில் அரசியல் இல்லை. வேதனை


ஆரூர் ரங்
ஜூன் 04, 2025 19:57

உயிரிழந்த வீர கன்னடர்களுக்கு தியாகி பட்டங்களை அளிக்கவும் .


ramesh
ஜூன் 04, 2025 21:46

ஏன் இந்த வெறுப்பு கருத்து ஆரூர் . கன்னடர்களும் இந்தியாவை சேர்ந்த நம் சகோதரர்கள் தானே . உயிர் எவ்வளவு விலை மதிக்க முடியாதது . கும்பகோணம் கும்ப மேளா , புஷ்பா பட ரிலீஸ் பொது நடந்தது, உத்ரா பிரதேசத்தில் நடந்தது எதுவும் திட்டமிட்டு நடத்த பட்டது அல்ல . இயற்கையாகவே மக்களின் தேவை இல்லாத ஆர்வத்தால் நடை பெறுகிறது . இருந்தாலும் இதை காவல் துறை சரியான முறையில் காய் ஆண்டிருக்கவேண்டும் என்பதே சரி . எந்த கட்சி அரசியல் வாதிகளாலும் நமக்கு 10 காசுக்கு ஆதாயம் கிடையாது. மன சந்தோஷத்துக்காக மட்டுமே நம் விரும்பிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து கருத்து போடுகிறோம் . ஆனால் அனைத்து இந்தியர்களும் நமது சகோதர்கள் தான்


புதிய வீடியோ