உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்மொழி கொள்கைக்கு அனுமதி அளிக்கணும்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., முறையீடு

மும்மொழி கொள்கைக்கு அனுமதி அளிக்கணும்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., முறையீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மும்மொழி கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி பா.ஜ, தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'புதிய தேசிய கல்வி கொள்கையை உள்ளடக்கிய, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தா விட்டால், அதற்கான நிதியை வழங்க முடியாது' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது, தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தினால், மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டியிருக்கும். அது ஹிந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் எனக் கூறி, தி.மு.க., அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என நிர்பந்திக்கக் கூடாது' என, அ.தி.மு.க., - பா.ம.க., போன்ற எதிர்க்கட்சிகளும் மத்திய பா.ஜ., அரசை வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் இன்று (மார்ச் 06) பா.ஜ., வழக்கறிஞர் ஜி.எஸ்.மணியன் மும்மொழி கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பொய்யான காரணங்களைக் காட்டி மும்மொழிக் கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்க மறுக்கிறது. மும்மொழி கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

kantharvan
மார் 07, 2025 10:59

கணபதி ஹிந்தியே இந்திய மொழி அல்ல அது உருது அரபி மற்றும் பெர்சியன் களுக்கு பிறந்த மொழி. மதத்தை வைத்து தமிழகத்தில் விளையாட முடியாது என்பதை எத்தனை முறைதான் எடுத்து சொல்வது.


Ganapathy
மார் 06, 2025 23:58

அதுசரி திராவிட களவாணி சொம்புகளா.. அரசு பள்ளியில் எதுக்கு உருதை கற்றுதரணும்? ஹிந்தி வேண்டாம்னா உருது மட்டும் ஓட்டுக்காக வேணும் அப்படித்தானே..அது சரி எல்லாம் உருது பேசும் ..?


vivek
மார் 06, 2025 23:42

2021 இல் தான் வென்றது... அதற்கு முன் தோற்ற கட்சி தான் திமுக...


தமிழ்
மார் 06, 2025 23:39

மிக தாமதமான நடவடிக்கை, பரவாயில்லை, இப்பவாவது செய்தீர்களே. ஆனால் திராவிட மாடல் மைலாட்ஸிடம் விசாரணைக்கு போகாமல் இருக்கவேண்டும். மொழியால் ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இன்று அதே மொழியால் முடிவுரை எழுதப்படுகிறது.


தமிழன்
மார் 06, 2025 22:17

நிதியை கொடுத்துவிட்டு நீ வழக்கு போட்டிருந்தால் உன்னை உத்தமன் என்று நம்பலாம் ஒன்றிய அரசே மாநிலங்களின் வருவாயில்தான் காலம்தள்ளுது இதை வாங்கி வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் நிதியை தரமாட்டேன் என்று சொல்ல இவர்களுக்கு எவன் உரிமை கொடுத்தது??


Oviya Vijay
மார் 06, 2025 21:36

தமிழக மக்கள் என்றைக்குமே மத்திய பிஜேபி அரசை அங்கீகரிக்கவேயில்லையே... சென்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட பிஜேபிக்கு தமிழக மக்கள் பரிசாக தந்தது ஜீரோ தான்... ஞாபகம் இருக்கிறதா இல்லையா இந்த Dharmavaan க்கு...??. இதை உணராமல் இந்த கேள்வியை என்னிடம் கேட்கும் Dharmavaan என்னும் சங்கி அறிவிலியா இல்லை நான் அறிவிலியா??? சங்கி என்று Dharmavaan தன்னை வெளிக்கொணர்ந்த தருணம் இது...


vivek
மார் 06, 2025 23:40

2020 வரை திமுக தோல்வி அடைந்தது என்று தெரியுமா?


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 06, 2025 21:26

தவறில்லையே ?? கட்சி நலனுக்காக / குடும்ப நலனுக்காக அரசு செலவில் வழக்குத் தொடரவில்லையே ??


சோழநாடன்
மார் 06, 2025 20:08

உச்சநீதி மன்றத்தில் பாஜக மும்மொழியைத் தமிழ்நாட்டில் அமல் செய்யவேண்டும் என்று மனு செய்துள்ளது. சரி....உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னால் அதை மாநில சட்டமன்றம் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை. கேரளா ஐய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை ஒன்றிய அரசு ஏற்க மறுத்து நிராகரித்தது. உங்களுக்கு வந்தா இரத்தம்....எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? தீர்ப்பு வரட்டும்...... அப்போது தெரியும் தமிழர்கள் யார் என்று.....


Oru Indiyan
மார் 06, 2025 22:10

புதிய மொழி கொள்கையில் ஹிந்தி திணிக்கிறார்கள் என்று ஒரே ஒரு ஆதாரம் காண்பி பார்க்கலாம்..


ஆரூர் ரங்
மார் 06, 2025 22:27

அய்யப்பன் கோயில் அனுமதி மாநில அரசு மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். மத்திய அரசு தலையிடவில்லை. ஏக்கர் கணக்குல ரீல் விடக்கூடாது.


தாமரை மலர்கிறது
மார் 06, 2025 19:52

மத்திய அரசின் கொள்கைகளுக்கு சுப்ரிம் கோர்ட் எப்போதுமே தடை போட்டது இல்லை.அதனால் நீட் தேர்வை போன்றே இதிலும் நல்ல தீர்ப்பு வரும். பணக்கார தமிழ் மாணவர்களுக்கு மட்டுமே கிட்டிவந்த அரிய வாய்ப்பாக இருந்த ஹிந்தியை இனி ஏழை மாணவர்களும் கற்க இயலும். அடுத்த பத்தாண்டில் அனைத்து தமிழர்களும் ஹிந்தி பேசும் வாய்ப்பு கிட்டும்.


hariharan
மார் 06, 2025 19:43

நான் மலேசியா சென்றபொழுது நம் தமிழர்களை சந்தித்தேன். சிலர் கிராப் என்ற கார் வாடகை நிறுவனத்தில் டிரைவராக இருக்கின்றனர். அதில் ஒருவர் என்னிடம் பேசும்பொழுது, அவருக்கு 7 மொழிகள் தெரியும் என்றார். அவைகளில் மான்டரின் (சீனர்களின் மொழி),மலாய், தாய், தமிழ், ஹிந்தியும் அடக்கம்.அங்கு மும்மொழி கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. மாணவர்கள் எந்த மொழியையும் படிப்பதால் அரசியல்வாதிகளுக்கு என்ன பிரச்சனை? மாணவர்களின் அறிவுத்திறனை பயன்படுத்த பல மொழிகள் கற்பது நன்று. இதை ஏன் தடுக்கிறார்கள்?


சோழநாடன்
மார் 06, 2025 20:10

கார் டிரைவர்.... சுற்றுலா பயணிகளோடு பயணம் செய்யவேண்டியவர் 7 மொழிகளைத் தெரிந்து வைத்துள்ளார். படித்தா தெரிந்துகொண்டார். தேவை என்றால் 10 மொழி படிப்போம். திணித்தால் எதிர்ப்போம்.


Ashok Subramaniam
மார் 06, 2025 21:50

அதெல்லாம் படிக்கிறவன் படவேண்டிய கவலை. பணத்துக்கு அலையற 200ரூ உபிகளுக்கு இதுல எங்க வலிக்குது.. சிலர் இங்கே எதிர் வினையில் திமுக சார்பு நிலையில் பேசுகிறார்கள்


புதிய வீடியோ