உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., பேரம் பேசிய குற்றச்சாட்டு: கெஜ்ரிவாலை தொடர்ந்து டில்லி அமைச்சருக்கு "நோட்டீஸ்"

பா.ஜ., பேரம் பேசிய குற்றச்சாட்டு: கெஜ்ரிவாலை தொடர்ந்து டில்லி அமைச்சருக்கு "நோட்டீஸ்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., மீது குற்றஞ்சாட்டிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அக்கட்சி புகார் அளித்த நிலையில், அவரிடம் போலீசார் நேற்று 'நோட்டீஸ்' அளித்தனர். இந்த குற்றச்சாட்டில், இன்று(பிப்.,04) ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.,வும், டில்லி கல்வி அமைச்சருமான அதிஷிக்கு குற்றப்பிரிவுத் துறை போலீசார் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. இங்கு, தன் அரசை கவிழ்க்க, பா.ஜ., சதி செய்வதாகவும், கட்சியில் இருந்து விலகினால், 25 கோடி ரூபாய் தருவதாக, தங்கள் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ.,க்களிடம், பா.ஜ., பேரம் பேசியதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இதற்கு, டில்லி பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதுதொடர்பாக பொய் புகாரை எழுப்பிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் அளித்தனர்.இதுதொடர்பாக டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் ஐந்து மணி நேர காத்திருப்புக்கு பின் போலீசார், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் போலீசார் விசாரணை நோட்டீஸ் அளித்தனர். இதில், பா.ஜ., அளித்த புகாருக்கு மூன்று நாட்களுக்குள் உரிய பதிலை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த குற்றச்சாட்டில், இன்று(பிப்.,04) ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.,வும், டில்லி கல்வி அமைச்சருமான அதிஷியின் வீட்டுக்குச் சென்ற குற்றப்பிரிவுத் துறை போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ., சதி செய்து வருவதால், ஆம் ஆத்மியினரை குறி வைத்து வருகின்றனர் என கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sankar
பிப் 05, 2024 06:41

இவர்களின் முழுநேர தொழில் பொய் பேசுவது மட்டுமே


J.V. Iyer
பிப் 04, 2024 17:05

யாராவது விரும்புவார்களா?


Seshan Thirumaliruncholai
பிப் 04, 2024 16:41

சாதாரண வியாபாரி சிறுது லாபத்துடன் வியாபாரம் செய்கிறான். நிம்மதியாய் காலத்தை ஒட்டி வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். ஆனால் கொள்ளை லாபத்தில் வணிகம் செய்பவர் விசாரணை எதிர்நோக்கி நிம்மதியற்று சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் சாவும் தள்ளிப்போகிறது.


Raghavan
பிப் 04, 2024 14:52

ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்று சொல்லி ஒரு கட்சியை ஆரபித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் எப்போதும் ஊழலே கதி என்று இருக்கும் இவரை என்னவென்று சொல்லுவது. என்றைக்கு திகாருக்கு போகப்போகிறாரோ


Dharmavaan
பிப் 04, 2024 18:14

அண்ணா ஹசாரே வளர்த்த கள்ளிச்செடி


Indhuindian
பிப் 04, 2024 13:49

ஆப் ல இருக்கறது அவ்வளவும் அறாதுங்க போலிருக்கு குண்டுக்கட்ட அப்படியே தூக்கிகிட்டு போயி திஹார்லே வெச்சிடுங்க


M Ramachandran
பிப் 04, 2024 13:16

இப்போ குஜுரிவாலுடன் சேர்ந்தே கம்பி என்ன வேண்டும்


M Ramachandran
பிப் 04, 2024 13:15

அம்மையார் குஞ்சிரிவாலுக்கு ஜால்றா தட்டும் போது சிறிதாவ்து8 மூளையைய்ய உபயோக படுத்தி இருக்க வேகும்


M Ramachandran
பிப் 04, 2024 13:12

குஜுரிவால் இப்போர் லப்டப் வேகம் அடிக்குது.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ