உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியின் முன்னேற்றத்தை தடுக்க சதி: பா.ஜ., மீது சிசோடியா குற்றச்சாட்டு

டில்லியின் முன்னேற்றத்தை தடுக்க சதி: பா.ஜ., மீது சிசோடியா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியின் முன்னேற்றத்தை தடுக்கவே, சதி செய்து முதல்வர் கெஜ்ரிவாலை பா.ஜ., சிறையில் அடைந்துள்ளது என முன்னாள் டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.டில்லி சுல்தான்பூர், மஜ்ரா தொகுதி மக்களை சந்தித்து, மணிஷ் சிசோடியா பேசியதாவது: பா.ஜ.,வினர் என்னையும், முதல்வர் கெஜ்ரிவால் உட்பட பிற தலைவர்களையும் பொய் வழக்குகளில் சிறையில் அடைத்தனர். மக்களை தொந்தரவு செய்வதை பா.ஜ.,வினர் நிறுத்த வேண்டும். டில்லியின் முன்னேற்றத்தை தடுக்கவே சதி செய்து முதல்வர் கெஜ்ரிவாலை பா.ஜ., சிறையில் அடைந்துள்ளது. கெஜ்ரிவால் நகரின் வளர்ச்சியை முழு வேகத்தில் துவங்குவார். தற்போது, நிலவும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பிரச்னையை கெஜ்ரிவால் வெளியில் இருந்தால் போராடி தீர்த்திருப்பார்.

பொய் வழக்கு

நாங்கள் தவறு செய்ததற்காக, எங்களை சிறையில் அடைக்கவில்லை. கெஜ்ரிவால் ஊழல் செய்து பணம் சம்பாதிக்க விரும்பினாரா? மின் கட்டணத்தை பூஜ்ஜியமாக்கினார். அதற்கு பதிலாக அதிக கட்டணம் நிர்ணயம் செய்து, அவர் பணம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. கெஜ்ரிவால் அற்புதமான பள்ளிகள், மருத்துவமனைகளை உருவாக்கினார். இதையெல்லாம் எப்படி செய்வது என்று பா.ஜ.,வினருக்கு தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 23, 2024 11:56

எல்லா மாநில முதல்வர்களும் மாநில முன்னேற்றம் முன்னேற்றம் என்று பேசுகின்றனர். முன்னேற்றம் என்றால் என்ன? அதற்குகான அளவு கோல் என்ன? அதற்கான காலவரையறை என்ன? தெளிவாக கூறினால் நல்லது. முன்னேற்றம் முன்னேற்றம் என்று கூறிவிட்டு இலவசங்கள் கொடுத்தால் எப்படி முன்னேற்றம் என்று ஏற்றுக் கொள்ள முடியும். மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க செய்யாமல் இலவசங்கள் அள்ளி வீசினால் எப்படி முன்னேற்றம் என்று கூற முடியும். இலவசங்கள் மற்றும் இட ஒதுக்கீடுகள் குறைந்து கொண்டே வந்தால் தானே முன்னேற்றம் ஆகும்.


THERESHM P.M.PERUMAL
ஆக 22, 2024 14:28

திருட்டு வழக்கில் ஜெயில் போயிட்டு வந்தவர் தானே நீங்கள் அதே இடத்தில் பேச வெட்கமாக இல்லை திருடர்களுக்கு இருக்க வாய்ப்பு இல்லை


Azar Mufeen
ஆக 22, 2024 13:27

தரமான கல்வியை கொடுத்ததால்தான் அவனுகளுக்கு கோவம் வந்து சிறையில் அடைச்சானுங்க, இப்படியே விட்டாக்க பிள்ளைகளுக்கு பகுத்தறிவு வந்துடும் அப்புறம் அல்லாஹுஅக்பர், ஜெய்ஸ்ரீராம் னு சொல்லி பிளவுபடுத்தமுடியாது உடுவோமா அதான் ஜெயிலில் போட்டாச்சு


Radhakrishnan Seetharaman
ஆக 22, 2024 21:59

ஆமாம், அந்தப் பள்ளியில் படித்து வந்தவர் தான் இந்த அறிவிலி ??


sankar
ஆக 22, 2024 09:19

சாராயதிருடனுக்கு பேச்சப்பாரு


பேசும் தமிழன்
ஆக 22, 2024 08:33

ஊழல் மூலம் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க நினைப்பது நீங்கள் தான்.... விட்டால் ஊழல் மூலம் நாட்டை கொள்ளை அடிப்பது எங்கள் உரிமை என்று கூறினாலும் கூறுவீர்கள் போல !!!


Barakat Ali
ஆக 22, 2024 08:30

மதுபான ஊழல் தில்லியின் முன்னேற்றத்துக்கு வழி ன்னா நீங்க சொல்றது சரிதான் ......


குமரி குருவி
ஆக 22, 2024 08:23

யார்..யார்..எதை எதை பேச வேண்டும் என்ற விவஸ்தை இல்லை..


VENKATASUBRAMANIAN
ஆக 22, 2024 07:56

பிஜேபி விரைந்து வழக்குகளை முடித்தால் இவர் இப்படி பேசமுடியாது. அமலாக்கத்துறை விரைந்து வழக்குகளை முடிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்


vadivelu
ஆக 22, 2024 07:51

நமக்குத்தான் கோர்ட்டு இருக்கே. கெஜ்ரிவால் இல்லாமல் உங்களால் டில்லியை முன்னேற்ற முடியாதா. உங்களுக்கு எல்லாம் மோடி , பா ஜா கா அதிகாரத்தில் இருக்கும் வரை அதிர்ஷ்டம்தான். எதை புருடா விட்டாலும் அதை உருட்ட ஒரு கூட்டம் இருக்கு. என்ன துரதிர்ஷ்டம் என்றால் அது வெறும் இருபது விழுக்காடு மட்டுமே. எல்லோரும் இந்தியர்களே ஆனால் அந்நிய கலாச்சாரத்தை ஏற்று கொண்டவர்கள். அவ்வளவுதான்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை