உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிளப் தேர்தலில் மோதும் பா.ஜ., பிரபலங்கள்: டில்லியில் பரபரப்பு

கிளப் தேர்தலில் மோதும் பா.ஜ., பிரபலங்கள்: டில்லியில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லியில் உள்ள ஒரு கிளப்பின் தேர்தல், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பார்லிமென்டிற்கு அருகே உள்ளது, 'கான்ஸ்டிடியூஷன்' கிளப்; இதில், கான்பிரன்ஸ் ஹால், பெரிய நவீன ரெஸ்ட்டாரன்ட், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், பாட்மின்ட்டன் மற்றும் 'பில்லியர்ட்ஸ்' விளையாட்டு தளங்கள் என, ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ள இந்த கிளப்பில், 1,200 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.,க்கள் மட்டுமே, இந்த கிளப்பில் உறுப்பினர்களாக இருக்க முடியும். இங்கு மிகவும் சக்தி வாய்ந்த பதவி என்றால், அது செயலர் பதவி தான். மற்ற பதவிகளுக்கு போட்டியில்லாமல் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.கடந்த, 13 ஆண்டுகளாக செயலராக இருப்பவர், பா.ஜ., - எம்.பி.,ராஜிவ் பிரதாப் ரூடி. விமான பைலட் லைசென்ஸ் பெற்றவர். ஏர் பஸ் மற்றும் சுகோய் போர் விமானத்தையும் இயக்கியவர். அடுத்த மாத கிளப் தேர்தலில், மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து போட்டியிடுபவரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்; அவர் முன்னாள் எம்.பி., சஞ்சீவ் பால்யான்.எதற்கு இரண்டு பா.ஜ.,வினர் இந்த பதவிக்காக மோதிக் கொள்கின்றனர்? காரணம், இந்த கிளப்பின், 'பவர்' தான். பொதுத்தேர்தல் போல, இதில் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. 'எப்படியும் ராஜிவ் பிரதாப் ரூடியைத் தோற்கடித்து காட்டுகிறேன்' என, தீவிர முயற்சியில் இறங்கி, ரூடிக்கு எதிராக ஊழல் பட்டியலை வெளியிட்டு உள்ளார். இது, பா.ஜ.,வில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை