உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பாஜ வழக்கு

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பாஜ வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி, சுப்ரீம்கோர்ட்டில் பாஜ நிர்வாகி உமா ஆனந்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை வரும் அக் 10ம் தேதி தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவுபடி, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை கோரி விஜய் கட்சியினர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதே கோரிக்கையை வலியுறுத்தி பாஜ நிர்வாகி உமா ஆனந்தன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. வழக்கு வரும் அக்.,10ல் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Shankar
அக் 07, 2025 13:48

கவாய் நீதிபதி தலைமை என்றால் வழக்கு தள்ளுபடியாக வாய்ப்புள்ளது. அல்லது தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி காலத்தை கடத்தப்படலாம்.


SUBRAMANIAN P
அக் 07, 2025 13:47

அப்ப ஊத்தி மூடப்படும்.. அவரு திமுக காங்கிரஸ் அனுதாபி..


Barakat Ali
அக் 07, 2025 13:45

டிவிக்கே ஐ இறக்கி விளையாடிய துக்ளக்கார் அதிர்ச்சி .....


Arul Narayanan
அக் 07, 2025 13:40

விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்பவர்கள் தவறுகளையும் விஞ்ஞான பூர்வமாக செய்து இருப்பார்கள். ஆவணங்களைக் காட்டி எளிதில் தப்பி விடுவார்கள். யாரையோ தப்ப வைக்க தனது பெயரை பாஜக இழக்க நேரிடும்.


சமீபத்திய செய்தி