உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள அரசு பொய் சொல்கிறது பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு

கேரள அரசு பொய் சொல்கிறது பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ''வெளிநாட்டு நிதியுதவியை பெற அனுமதி மறுக்கப்பட்டதாக கேரள அரசு பொய் சொல்கிறது,'' என, அம்மாநில பா.ஜ., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜிவ் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார்.முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவுக்கு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நிதியுதவி பெற, மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மார்க். கம்யூ., கட்சியைச் சேர்ந்த கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், 'இயற்கை பேரிடர்களால் கேரளா பாதிக்கப்பட்ட போதும்கூட, வெளிநாட்டு நிதியுதவியை பெற மத்திய அரசு அனுமதி மறுத்தது. ஆனால் தற்போது, மஹாராஷ்டிராவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மாநிலங்களிடையே மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது' என, குற்றஞ்சாட்டினார்.இதுகுறித்து, கேரள பா.ஜ., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது:வெளிநாட்டு நிதியுதவி விவகாரத்தில், கேரள அரசு தவறான தகவல்களை பரப்பி வருவதாக, ஏற்கனவே ஆதாரங்களுடன், மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்து விட்டார். இருந்தும், கேரள அரசு தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறது. கொள்கை முடிவில் மாற்றம் ஏற்பட்டதால் தான், வெளிநாட்டு நிதியுதவி பெற மஹாராஷ்டிராவுக்கு அனுமதி கிடைத்தது. தற்போது விண்ணப்பித்தால், கேரளாவுக்கும் அனுமதி கிடைக்கும். உண்மையை புரிந்துகொள்ளாமல், அரசியலுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது தவறு.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sundar R
ஜூன் 06, 2025 10:00

மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ள 90% க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பாகவே பாஜகவில் சேர்ந்து விட்டார்கள். இதனால், கம்யூனிஸ்ட்கள் 2021 மேற்குவங்க அசெம்பிளி தேர்தலில் 294-க்கு பூஜ்யமும், 2024 பாராளுமன்ற தேர்தலில் 42-க்கு பூஜ்யமும் பெற்றது. வருவிருக்கும் 2026 அசெம்பிளி தேர்தலிலும் கம்யூனிஸ்ட்கள் 294-க்கு பூஜ்யம் தான் வாங்குவார்கள். மேற்கு வங்காளத்தைப் போல் கேரளத்தில் உள்ள 90% ஹிந்துக்கள் பாஜகவுக்கு மாறினால், கேரளத்தில் எப்போதும் காணப்படும் அழிமதி மெகாஊழல்கள் ஒழியும். கேரளாவில் அதன் பொறுப்பாளர் திரு. பிரகாஷ் ஜாவடேகர் கடந்த வருடம் திருவனந்தபுரத்திற்கு வந்து. VETERAN CPI-M LEADER. திரு E P ஜெயராஜன் அவர்களையும், அவரது தீவிர பாஜக பிரியர்களான மகன்கள் திரு ஜெய்சன் மற்றும் திரு ஜிதின்ராஜ் அவர்களையும் சந்தித்தார். அவர்கள் எல்லோரையும் பாஜகவிற்கு இழுத்தார். ஆனால், அங்கு அதிக அளவில் நிறைந்திருக்கும் கம்யூனிஸ்ட் கூண்டாக்கள் அவர்களை விடவில்லை. ராஜீவ் சந்திரசேகர் ஏராளமான பாஜக தலைவர்களுடன் சேர்ந்து மேற்குவங்கம் போல் கம்யூனிஸ்ட்களை பாஜகவுக்கு மாற்ற வேண்டும். வரவிருக்கும் 2026 கேரள அசெம்பிளி தேர்தலுக்கு முன்பே மாற்ற வேண்டும். கம்யூனிஸ்ட் தொண்டர்களும் நம்பிக்கையோடு பாஜகவுக்கு மாற வேண்டும். ஏனென்றால், கம்யூனிஸ்ட்கள் ஹிந்து ஊழியர்களுக்கு ஒரு புல்லைக்கூட பிடுங்கி போடமாட்டார்கள். ஹிந்து ஊழியர் ஒருவர் மட்டும் பாஜகவுக்கு மாறினால் அவருக்கு கம்யூனிஸ்ட்கள் தொந்தரவு கொடுப்பார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்து ஹிந்து ஊழியர்களும் ஒன்றாக திரண்டு பாஜகவுக்கு மாறினால், கம்யூனிஸ்ட் தலைவர்களில் கூட பலர் மேற்குவங்கத்தைப் போல் பாஜகவுக்கு மாறிவிடுவார்கள்.


முக்கிய வீடியோ