உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவிப்பு

விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவிப்பு

பீதர்: ''முன்னாள் முதல்வர் எடியூரப்பா வழிகாட்டுதலின்படி, மாநில தலைவர்கள் பங்கேற்கும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய வக்பு வாரியத்துக்கு எதிராக, மாநிலம் தழுவிய போராட்டத்தை, மாநில தலைவர் விஜயேந்திரா நேற்று பீதரில் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:விவசாயிகள், ஹிந்துக்கள் மீது முதல்வர் சித்தராமையா ஏன் கோபமாக இருக்கிறார்? பல ஆண்டு பழமையான கோவில்களுக்கும் கூட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.ஒட்டுமொத்த கிராமத்தையே இடமாற்றம் செய்து, விவசாயம் செய்ய விடாமல், விவசாயிகளுக்கு தொந்தரவு அளிக்கிறார்.நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளை தெருவுக்கு கொண்டு வந்து, காங்கிரஸ் அரசு கொடுமை செய்கிறது.சிறுபான்மையினருக்கு முதல்வர் போன்று சித்தராமையா நடிக்கிறார். மோசமான காங்கிரஸ் அரசால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். விவசாயிகளுக்கு துணையாக நின்றி, சித்தராமையாவுக்கு பாடம் புகட்டுவோம்.அதிகாரம் நிரந்தரமல்ல. வக்பு வாரியம் குறித்துகவலைப்பட வேண்டாம். உங்களுடன் நாங்கள்இருக்கிறோம். வரும் நாட்களில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா வழிகாட்டுதலின்படி, மாநில பா.ஜ., தலைவர்கள் பங்கேற்கும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை