உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறுதிவடிவம் பெறும் பீஹார் தேர்தல் தொகுதி பங்கீடு; 101 இடங்களில் பாஜ போட்டியிட திட்டம்

இறுதிவடிவம் பெறும் பீஹார் தேர்தல் தொகுதி பங்கீடு; 101 இடங்களில் பாஜ போட்டியிட திட்டம்

புதுடில்லி; பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ 101 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 102 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜ, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சிகளுமே முன்னிலையில் இருக்க, போட்டியிடும் தொகுதிகளின் பங்கீடு குறித்தும் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.அதன்படி, இம்முறை தேர்தலில் பாஜ 101 தொகுதிகளில் களம் காண திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 102 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்) கட்சி 18 முதல் 22 தொகுதிகளில் போட்டியிடக்கூடும் என்று தெரிகிறது.ஜித்தன்ராம் மஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, உபேந்திராவின் குஷ்வாகா ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா 7 முதல் 9 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீட் ஒதுக்கீடுகள் முடிவாகி விட்டதாகவும், முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ