உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் அமைச்சரை ஆபாசமாக பேசிய பா.ஜ., எம்.எல்.சி., ரவி கைது

பெண் அமைச்சரை ஆபாசமாக பேசிய பா.ஜ., எம்.எல்.சி., ரவி கைது

பெலகாவி, கர்நாடகா சட்டசபையில், பெண் அமைச்சரை ஆபாசமாக திட்டிய புகாரில், பா.ஜ., -- எம்.எல்.சி., ரவியை போலீசார் கைது செய்தனர்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.அம்பேத்கர் பற்றி அமித்ஷா கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மேல் சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., உறுப்பினர்களும் பதிலடி கோஷம் எழுப்பினர். சபையில் கூச்சல், குழப்பம் நீடித்தது. இதனால் சபையை, அரை மணி நேரத்திற்கு, தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஒத்தி வைத்தார்.பின், மேல்சபை தலைவரின் அறைக்கு சென்ற மகளிர் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், பா.ஜ., உறுப்பினர் ரவி தன்னை ஆபாசமாக திட்டினார் என்று கூறி கண்ணீர் விட்டார்.இதையடுத்து, சபையில் உறுப்பினர்கள் பேசிய ஆடியோ குரல் பதிவுகளை சேகரிக்கும்படி ஊழியர்களுக்கு, தலைவர் உத்தரவிட்டார்.கூட்டம் முடிந்ததும் சபை வளாகத்தில் ரவி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சூழ்ந்த சிலர், 'எங்கள் தலைவி லட்சுமியை பார்த்து எப்படி ஆபாசமாக பேசுவாய்' என கேட்டு, அவரை தாக்க முற்பட்டனர்.சபை பாதுகாவலர்கள், ரவியை பத்திரமாக அழைத்து சென்றனர். லட்சுமியின் ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டனர். லட்சுமியின் உதவியாளர் அளித்த புகாரை அடுத்து, அங்கு வந்த போலீசார், ரவியை கைது செய்து குண்டு கட்டாக வேனில் ஏற்றி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Tetra
டிச 20, 2024 16:13

சிடி ரவி ப்ரஸ்டேட் frustrate என்றுதான் சொன்னேன் என்கிறார். அது கூட அவரை தேவையில்லாமல் சாலை வேக கொலைகாரர் என்று அந்த பெண் மந்திரி சொன்ன போது. அது அப்பெண் மந்திரியின் காதில் அவர் சொல்வது போல் விழுந்ததாக குற்றம் சாட்டுகிறார். செய்யும் அத்தனை ஏமாற்று வேலையையும் மறைப்பதற்கு காங்க்ரஸ் செய்யும் நரித்தந்திர பித்தலாட்டம்


Madras Madra
டிச 20, 2024 10:25

எடியூரப்பா மீது கூட ஒரு பெண் பொய் புகார் கொடுத்த சம்பவம் நினைவுக்கு வருது


Anonymous
டிச 20, 2024 09:32

ராகுல் பார்லிமென்ட் தாக்குதல் செய்தியை திசை திருப்ப , இங்கு இப்படி ஒரு planned நாடகம் போல ..... அதெப்படி அடுத்த நாளே இப்படி ஒரு நிகழ்ச்சி ??????


அப்பாவி
டிச 20, 2024 08:30

இவருக்கு பின்னாடி பா.ஜ ஆட்சி அமைஞ்சா முதல்வராகி பெண்களை பாதுகாக்கும்.பொறுப்பு வர வாய்ப்பு இருக்கு.


A P
டிச 20, 2024 10:17

கிண்டல் கருத்துலிருந்தே தெரிகிறது.


Kanns
டிச 20, 2024 07:37

Sack both MLAs both Congress & BJP for Cheap & Vested Politics and for Murdering Democracy, Cheating People


raj82
டிச 20, 2024 07:22

With in one day common dress code, photo all ready? How? Good sign of planned pro.


J.V. Iyer
டிச 20, 2024 04:25

அப்படியென்றால், பாஜக மகளிர் எம்பீக்களும், M.L.A. க்களும் என்ன செய்கிறார்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை