உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ள பாதிப்பு ஆய்வுக்கு சென்ற பா.ஜ., - எம்.பி., மண்டை உடைப்பு

வெள்ள பாதிப்பு ஆய்வுக்கு சென்ற பா.ஜ., - எம்.பி., மண்டை உடைப்பு

கொல்கட்டா : மேற்கு வங்கத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய சென்ற பா.ஜ., - எம்.பி., காஹன் முர்மு மீது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஜல்பைகுரி மாவட்டத்தின் நாஹர்கட்டாவில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய, பா.ஜ., - எம்.பி., காஹன் முர்மு மற்றும் எம்.எல்.ஏ., சங்கர் கோஷ் ஆகியோர் நேற்று சென்றனர். அப்போது அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க சென்றபோது, அவர்களை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். சிலர், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள், பா.ஜ., தலைவர்கள் மீது கல் வீசினர். இதில், எம்.பி., காஹன் முர்முவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடன் சென்ற பா.ஜ., எம்.எல்.ஏ.,வும் சட்டசபை எதிர்க்கட்சி கொறடாவுமான சங்கர் கோஷும் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவர்கள் வந்த வாகனத்தையும் விஷமிகள் சூறையாடினர். இதற்கிடையே, படுகாயமடைந்த பா.ஜ., - எம்.பி., காஹன் முர்மு மற்றும் எம்.எல்.ஏ., சங்கர் கோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பா.ஜ., தேசிய தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்.,கின் காட்டாட்சி நடக்கிறது. நிவா ரண உதவிகளை வழங்க சென்ற பா.ஜ., - எம்.பி., மீது கண்மூடித்தனமான தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வராமல், அக்கட்சியினர் பா.ஜ.,வினரை தாக்கியுள்ளனர். இதற்கு, வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். இவ்வாறு குறிப்பிட்டுஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை