உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதியில் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா சுவாமி தரிசனம்

திருப்பதியில் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா சுவாமி தரிசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று (மே 11) சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.தரிசனத்திற்கு பின் தனது எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது; திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரார்த்தனையுடன் எனது நாள் தொடங்கியது, வெங்கடேஸ்வர சுவாமியின் ஆசீர்வாதம், இந்த புனித ஸ்தலத்தின் அமைதியும், வெங்கடேஸ்வரரின் தெய்வீக சக்தியும் நம் இதயங்களை அமைதியால் நிரப்புகின்றன. நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன். வெங்கடேசப் பெருமான் நம் மீது அருள் பொழிந்து செழிப்பு, ஒற்றுமை மற்றும் அமைதியை நோக்கி நம்மை வழிநடத்தட்டும். இவ்வாறு அந்த பதிவில் நட்டா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
மே 11, 2024 17:22

இந்தத் தடவை அவரால் கூட உங்கள் கட்சியை காப்பாற்ற முடியாது போல் உள்ளதே!


பாலாஜி
மே 11, 2024 15:36

தேவுடா... தேவுடா.. ஏழுமலை தேவுடா....


Lion Drsekar
மே 11, 2024 15:34

எல்லா திருக்கோவில்களில் இருக்கும் கடவுளுக் அதே சக்திதான் இருக்கிறது குறிப்பாக பழங்கால திருக்கோவில்கள் மிக மிக சக்தி வாய்ந்தது இன்றைக்கு எல்லாவற்றுக்குமே விளம்பரம் இருந்தால் மட்டுமே வியாபாரம் நல்ல வேளை இந்த திருக்கோவில் மருத்துவமனை, பல்கலைக்கழகம் , என்று மக்களின் வாழ்வாதாரம் காக்க தேனீக்களைப்போல் மணிநேரமும் தூய்மையான பணியாற்றுகிறார்கள் இதே போல் முக்கிய பிரமுகர்கள் மற்ற திருக்கோவில்களுக்கு விஜயம் செய்தால் அங்கும் மக்கள் நலப்பணிகள் நடைபெறும் வந்தே மாதரம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி