உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக அரசை கவிழ்க்க ரூ.100 கோடி: பா.ஜ., மீது சித்தராமையா பகீர் குற்றச்சாட்டு

கர்நாடக அரசை கவிழ்க்க ரூ.100 கோடி: பா.ஜ., மீது சித்தராமையா பகீர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு பா.ஜ., ரூ.100 கோடி வழங்க தயாராகி இருப்பதாக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது

எங்கள் எம்.எல்.ஏ.,க்களுக்கு பா.ஜ., ரூ.100 கோடி வழங்குவதாக எம்.எல்.ஏ., ரவிக்குமார் கவுடா என்னிடம் தெரிவித்தார். 'ஆபரேஷன் தாமரை' மூலம்தான் கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. அவர்கள் ஒருபோதும் மக்களின் ஆசியுடன் ஆட்சிக்கு வரவில்லை.

'ஆபரேஷன் தாமரை'

2008 மற்றும் 2019ல், 'ஆபரேஷன் தாமரை' மற்றும் பின்கதவு நுழைவு மூலம் அவர்கள் ஆட்சிக்கு வந்தனர். கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ., இந்த முறையும் அதே முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

எளிதல்ல

காங்கிரஸ் கட்சிக்கு 136 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமது அரசை கவிழ்ப்பது எளிதல்ல. பா.ஜ., ஆட்சிக்கு வர 60 எம்.எல்.ஏ., க்கள் ராஜினாமா செய்ய வேண்டும். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பணத்தால் ஏமாற்றப்பட மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Azar Mufeen
ஆக 31, 2024 22:01

இப்படிதான் சிசோடியா, கவிதா போன்றவர்கள் வெளிப்படையா சொன்ன காரணத்தினால் அமலாக்கத்துறை என்னும் ஏவல்துறையை அனுப்பி சிறை வைத்தார்கள் அடுத்த குறி நீங்கதான்


அசோக் குமார்
ஆக 31, 2024 17:09

நூறு கோடிதானா? சீப் தான். கவுத்திட்டா அவிங்க ஆட்சிக்கு வந்து ரெண்டே காண்டிராக்டில் 4000 கோடி சம்பாரிச்சிடலாமே...


M Ramachandran
ஆக 31, 2024 11:32

சித்தராமையா அவர்களே உங்கள் தலைமை சொல்படி அயல் நாட்டு உறவுடன் மோடியின் அரசை கவிழ்க்க அரசுடைமையான வாங்கிகளை மதிப்பளிக்க செய்தா காரியம் வெளி அந்த வுடன் நீங்கள் இப்படி டான்சு ஆடி காண்பிக்கிறீர்களா?


ramarajpd
ஆக 31, 2024 10:21

சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கொடுக்க வில்லை என்றால் வெளியே வந்த தனிக்கட்சி தொடங்குவார்.


swamy
ஆக 31, 2024 10:19

1000 கோடி கொடுத்து கூட கவிழ்க்கலாம் .... கேவலமான பிறவிகள்..


பேசும் தமிழன்
ஆக 31, 2024 09:49

காங்கிராஸ் கட்சி எம்எல்ஏ.,க்களுக்கு 100 கோடி என்பது சும்மா ஜுஜுபி.... உங்களை கவிழ்க்க வேறு யாரும் தேவையில்லை..... உங்கள் ஆட்களே போதும்.


Kasimani Baskaran
ஆக 31, 2024 09:39

ஏற்கனவே நிர்வாகம் முதல்வர், நிழல் முதல்வர், வெளியில் இருந்து இயக்கம் முதல்வர் வேறு யார் இராகுல் குடும்பத்தின் நிழல் கார்கேதான் போன்ற பலர்களுக்கு இடையில் கவிழ்ந்து கிடக்கிறது. இதில் புதிதாக பாஜக வேறு ஏன் கவிழ்க்க வேண்டும் - தேவையில்லை.


Duruvesan
ஆக 31, 2024 09:03

பாஸ் சிவகுமார் கிட்ட 63 mla இருக்காங்க, அவர் மேல உள்ள கேஸ் எல்லாம் கிளோஸ் பண்ண போறாங்கலாம்.


Iyer
ஆக 31, 2024 08:43

பிஜேபி நூறு கோடி செலவழித்தால் என்ன ? மூவாயிரம் நில ஊழல் செய்த நீங்கள் அந்த நூறு கோடி சதியை எளிதாக முறியடிக்க வேண்டியதுதானே ???


Iyer
ஆக 31, 2024 08:39

"எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பணத்தால் ஏமாற்றப்பட மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறும் நீங்கள் - அரசு கவிழ்வதை பற்றி ஏன் பயப்படணும் ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை