உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக மாஜி முதல்வர் எடியூரப்பா கைது; இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை

கர்நாடக மாஜி முதல்வர் எடியூரப்பா கைது; இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் அத்தியாசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களில் விலை மளமளவென அதிகரித்திருப்பதாக பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது. விலைவாசியை உயர்த்திய காங்கிரஸ் அரசைக் கண்டித்து 24 மணிநேர தொடர் போராட்டத்தை பா.ஜ., அறிவித்தது. மேலும், இந்த ஆட்சியில் விலை உயர்த்தப்பட்ட, பால், பெட்ரோல் உள்ளிட்ட 50 அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலையும் பா.ஜ., வெளியிட்டிருந்தது.நேற்று (ஏப்.,2) மதியம் முதல் பா.ஜ.,வின் 24 மணிநேர தொடர் போராட்டத்தை விடுதலை பூங்காவில் தொடங்கியது. இதில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நள்ளிரவிலும் இந்தப் போராட்டம் தொடர்ந்த நிலையில், இன்று மதியம் நிறைவடைகிறது. தொடர்ந்து, விலைவாசி உயர்வைக் கண்டித்து ஏப்., 7ம் தேதி மாநிலம் தழுவிய மாபெரும் பேரணிக்கு பா.ஜ., திட்டமிட்டுள்ளது.இந்த நிலையில், கர்நாடகா அரசைக் கண்டித்து இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Subash BV
ஏப் 04, 2025 18:12

Price rise standard in any govt. Take revenge during election. No choice. POLITICIANS wanted to amass wealth.


என்றும் இந்தியன்
ஏப் 03, 2025 16:01

நான் கூட சித்தராமையா கைது என மனதில் நினைத்துவிட்டேன்


Karunakaran
ஏப் 03, 2025 14:42

விலைவாசி உயர்விற்கு முக்கிய காரணம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வே. டீசல், பெட்ரோல் மற்றும் காஸ் விலையை குறைக்க ஏற்பாடு செய்யுங்கள், அத்யாவசிய பொருட்கள் விலை குறையும். கட்டுமான பொருட்கள் விலை குறையும். பயண கட்டணம் விலை குறையும். போக்குவரத்து கட்டணம் குறையும். மேலும் அணைத்து பொருட்களின் விலை குறையும் . இப்போது கூறுங்கள் , யார் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையை உயர்த்தினார்கள் என்று.


Rajpal
ஏப் 05, 2025 04:00

கர்நாடக டீசலுக்கான விற்பனை வரி விகிதம் 01-04-2025 முதல் 21.17 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, டீசல் லிட்டருக்கு ரூ. 2 அதிகரித்து, விற்பனை விலை ரூ. 19.02 ஆனது. கர்னாடகவில் யாருடைய ஆட்சி மை டியர் ??


joy johnson
ஏப் 03, 2025 09:52

ஒன்றிய அரசு பிஜேபி னு மறந்துட்டாங்களோ ???


நிக்கோல்தாம்சன்
ஏப் 03, 2025 09:37

கூட்டம் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை