உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 27 ஆண்டுகளுக்கு பின் தலைநகரில் பா.ஜ., ஆட்சி

27 ஆண்டுகளுக்கு பின் தலைநகரில் பா.ஜ., ஆட்சி

மத்தியிலும், பல மாநில தேர்தல்களிலும் வெற்றி பெற்றாலும், தேசிய தலைநகர் டில்லியைக் கைப்பற்ற முடியாமல் திணறி வந்த பா.ஜ., 27 ஆண்டுகளுக்கு பின், அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக பெரும் முட்டுக்கட்டையாக இருந்த ஆம் ஆத்மி என்ற தடையை பிரதமர் நரேந்திர மோடி அகற்றி உள்ளார். கடந்த 1993ல் டில்லிக்கு சட்டசபை அந்தஸ்து வழங்கப்பட்ட பின் நடந்த தேர்தலில், பா.ஜ., வென்றது. அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், மதன் லால் குரானா, சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா சுவராஜ் என்று மூன்று பேர் மாறி மாறி முதல்வர்களாக இருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1bgh8rsn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்பின், 1998 - 2013 வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் வென்று, ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தார். இதைத் தொடர்ந்து, 2013ல் நடந்த தேர்தலில், ஆம் ஆத்மி வென்றது.

முடிவு

முதல்வராக பதவியேற்ற, அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சி, 48 நாட்களில் முடிவுக்கு வந்தது. ஆம் ஆத்மிக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் திரும்ப பெற்றதால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெஜ்ரிவாலின் ஆட்சி குறுகிய காலத்தில் முடிந்தது.இதைத் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு ஜனாதிபதியின் ஆட்சி அமலில் இருந்தது. கடந்த 2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி, 70 தொகுதிகளில் 67ல் வென்றது. 2020 தேர்தலில் ஆம் ஆத்மி, 62ல் வென்றது.மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறை சென்று திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்தாண்டு செப்டம்பரில் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து ஆதிஷி முதல்வரானார்.தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கில், கடந்த, 5ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டது.தேசிய அளவிலான, 'இண்டி' கூட்டணியில், ஆம் ஆத்மியுடன் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைத்தாலும், தேசிய தலைநகரில் வெற்றி பெற முடியாதது, அக்கட்சிக்கு பெரிய நெருடலாகவே இருந்தது. கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களில், டில்லியின் ஏழு தொகுதிகளையும் கைப்பற்றினாலும், சட்டசபையை கைப்பற்ற முடியாதது, கட்சித் தலைமைக்கு கவுரவ பிரச்னையாகவே இருந்தது. சர்வதேச ஊடகங்களும் இதை விமர்சித்து செய்தி வெளியிட்டன.இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்த முறை தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் நட்டா, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் என, பெரும் படை களமிறக்கப்பட்டது. இதைத் தவிர, ஹரியானா, மஹாராஷ்டிராவில் உதவியதுபோல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் களப்பணியில் இறங்கியது.

இந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., புதிய வியூகம் வகுத்தது.

மதுபான ஊழல் மோசடி மற்றும் தான் தங்குவதற்கு சொகுசான கண்ணாடி மாளிகை கட்டியது ஆகியவற்றால், கெஜ்ரிவாலுக்கு எதிரான மனநிலை மக்களிடையே உருவானது. இதை சாதகமாக்கி, அவற்றை வைத்து பா.ஜ., பிரசாரம் செய்தது.மேலும், மத்திய பட்ஜெட்டில், 12 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு வரி கிடையாது என்ற அறிவிப்பு, நடுத்தர வருவாய் பிரிவினர் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

முன்னிலை

டில்லி வாக்காளர்களில் 60 சதவீதம் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். மேலும் மத்திய அரசுப் பணிகளில் அதிகம் உள்ளோர். புதிய சம்பள கமிஷன் அறிவிப்பும், இவர்களை ஈர்த்தது.இந்நிலையில், கடந்த 5ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. துவக்கம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ., முன்னிலையில் இருந்தது.இறுதியில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், பா.ஜ., 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது.பெரும்பான்மைக்கு, 36 தொகுதிகள் தேவை என்ற நிலையில், அதை விட அதிகமான தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்று சாதித்துள்ளதுஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியில், பா.ஜ.,வின் பர்வேஷ் வர்மாவிடம், 4,089 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவும் தோல்வி அடைந்தார். டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து, அந்த கட்சியின் தொண்டர்கள் நாடு முழுதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தவறவிட மாட்டோம்!

பா.ஜ.,வுக்கு இந்த வரலாற்று வெற்றியை அளித்த அனைவருக்கும் அடிமனதில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன். டில்லியில் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட மாட்டோம். வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவதில் டில்லி முக்கிய பங்கு வகிப்பதை உறுதி செய்வோம்.- நரேந்திர மோடி,பிரதமர்

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்!

மக்களின் தீர்ப்பே முதன்மையானது; அதை நாங்கள் ஏற்கிறோம். வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கு வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் நிறைவேற்றுவர் என்று நம்புகிறேன். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சிறந்த எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவோம்.- அரவிந்த் கெஜ்ரிவால், ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி

முதல்வர் யார்?

டில்லியில், 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ள நிலையில், முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.வழக்கமாக எந்த மாநிலமாக இருந்தாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே சட்டசபை தேர்தலை பா.ஜ., சந்திக்கும். தேர்தலுக்குப் பின், பல முக்கிய தலைவர்களுக்கு, முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேசப்படும். ஆனால், யாரும் எதிர்பார்க்காத ஒருவரை கட்சித் தலைமை முதல்வராக அறிவிக்கும். இதில் ஜாதி, பிராந்தியம் உட்பட பல காரணங்கள் இருக்கும். மேலும், அடுத்தத் தலைமுறை உருவாக்குவதும் முக்கியமான நோக்கமாக இருக்கும்.இந்த வகையில், டில்லியில் யார் முதல்வர் என்பது தொடர்பாக பலருடைய பெயர்கள் உலா வருகின்றன.அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா இதில் முன்னிலையில் உள்ளார். மற்றொரு முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜின் மகள் பான்சுரி சுவராஜ் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது. கட்சியின் தேசிய செயலரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான துஷ்யந்த் கவுதம், வடகிழக்கு டில்லி எம்.பி.,யான மனோஜ் திவாரி, கட்சியின் டில்லி முன்னாள் தலைவர் சதீஷ் உபாத்யாய், தற்போதைய தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோரும் போட்டியில் உள்ளனர். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

sambath kumar
பிப் 10, 2025 10:38

useless shameless ...


அப்பாவி
பிப் 09, 2025 21:26

27 ஆண்டுகளுக்கு முன்பு துரத்தப் பட்டவர்கள் இன்னிக்கிதான் திரும்பி வந்திருக்காங்க.


naranam
பிப் 09, 2025 10:33

அவ்வளவு தான், உபிஸ் எல்லாம் இப்ப கதறுவானுங்களே! அடுத்த அடி இந்த திராவிட மாடலுக்குத் தான்.


பெரிய ராசு
பிப் 09, 2025 19:16

அடித்து துவம்சம் செய்ய வேண்டும் அனைத்து RSS படையை களத்தில் இறக்கி அனைத்து இந்து சமுதாய மக்களிடம் சத்திய பிரமாணம் வாங்க வேண்டும்


R.PERUMALRAJA
பிப் 09, 2025 10:17

aggressive பாலிடிக்ஸ் செய்த இந்திரா இருந்தவரை காங்கிரஸ் ஆட்சி பீடம் ஏறியது , aggressive பாலிடிக்ஸ் செய்த ஜெயலலிதா இருந்தவரை ஆ தி மு க அசைக்க முடியாத கட்சியாக இருந்தது , aggressive பாலிடிக்ஸ் செய்தவரை சரத்பவார் கட்சி சாணக்ய கட்சியாக திகழ்ந்தது , aggressive பாலிடிக்ஸ் செய்த பால்தாக்கரே இருந்தவரை ஷிவா சேனா வலுவுடன் இருந்தது , aggressive பாலிடிக்ஸ் செய்யும் மம்தா இன்று வரை முதல்வராக இருக்கிறார் , இந்த யுக்தியை தான் பா ஜா கா டில்லி சட்டசபை தேர்தலில் கையாண்டு இருக்கிறது . இனி பா ஜா க விற்கு ஏறுமுகமே aggressive பாலிடிக்ஸ் செய்ய துணிவில்லாத ராகுல் /எடப்பாடி / ஸ்டாலின் / மல்லிகார்ஜுன கார்கே /நிதிஷ் போன்றோரை அரசியல் உலகம் மிக விரைவில் அரசியலை விட்டு அப்புறப்படுதும் .


Mediagoons
பிப் 09, 2025 09:17

அடக்குமுறை, பணபலத்துடன் , இலவசமும் சேர்த்து மக்களை ஏமாற்றி பெற்றது


xyzabc
பிப் 09, 2025 09:41

நீ நிஜமாகவே பெரிய goon.


veera
பிப் 09, 2025 12:56

உண்மை....ஈரோட்டில் இது தான் நடந்தது


guna
பிப் 09, 2025 16:37

read....JFK's Forgotten Crisis: Tibet, the CIA, and the Sino-Indian War


Mediagoons
பிப் 09, 2025 09:10

27 ஆண்டுகளானாலும் பாஜவோ மோடியோ திருந்தவில்லை


sridhar
பிப் 09, 2025 18:40

உங்க மொழியில் திருந்துவது என்றால் கிறிஸ்துவ முஸ்லீம்களிடம் குழைவது , ஹிந்துக்கள் நம்பிக்கையை இழிவுபடுத்துவது . இந்த கேவலம் எங்களுக்கு வேண்டாம். பிஜேபி ஆட்சி தான் இங்கேயும் வேண்டும்.


Mediagoons
பிப் 09, 2025 09:09

மோடியின் மத்திய குண்டர்களிடம் இருந்து தப்பிக்க தோற்பதற்காகவே ஆம் ஆத்மியினர் காங்குடன் கூட்டு சேரவில்லை .


பேசும் தமிழன்
பிப் 09, 2025 11:21

ஏம்பா பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது. உங்கள் இல்லாத இண்டி கூட்டணி புட்டு கொண்டு விட்டது. அதை ஒப்பு கொள்.. அதை விடுத்து கம்பி கட்டுற வேலை எல்லாம் வேண்டாம்.


Mediagoons
பிப் 09, 2025 09:07

காங்கிரசும் ஆம் ஆத்மியும் பெற்றது பா.ஜ.,வை விட அதிகம்.


xyzabc
பிப் 09, 2025 09:42

கணக்கில் புலி


M S RAGHUNATHAN
பிப் 09, 2025 10:38

இரண்டும் இரண்டும் சேர்ந்தால் 4 என்று சாதாரண கணிதம் கூறலாம். ஆனால் தேர்தல் கணிதத்தில் இரண்டும் இரண்டும் சேர்ந்தால் பூஜ்யம் ஆகவும் ஆகலாம். ஏனென்றால் ஒரு இரண்டு மைனஸ் இரண்டு -2 ஆக இருக்க வாய்ப்புண்டு. ராகுலின் சாதனை டெல்லியில் 3 லோக் சபா தேர்தல், 3 சட்டசபை தேர்தலில் கிடைத்தது பூஜ்யம். Double hatrick of zeroes.


பேசும் தமிழன்
பிப் 09, 2025 11:23

இங்கேயும் தான் விடியல்... 40 க்கு 40 என்று கதை கட்டி வருகிறார்.. அதிமுக மற்றும் பிஜெபி வாங்கிய ஓட்டுக்கள். இண்டி கூட்டணி வாங்கியதை விட அதிகம். அதனால் விடியல் தலைவர் வெற்றி பெறவில்லை என்று கூற முடியுமா ???


Oviya Vijay
பிப் 09, 2025 09:06

நம்ம ஜீ மூனாவது முறையா மத்தியில ஆட்சியில இருக்காரு... அப்படின்னா என்ன அர்த்தம்? கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில ஆட்சியில இருக்காரு... அப்படி இருந்தும் தலைநகர் டில்லியை பிஜேபியால் ஆட்சி செய்ய முடியவில்லை... ஒரு சாமானியனிடம் தோற்று போனார்கள். இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் நீங்கள் ஆட்சி செய்தும் என்ன பிரயோஜனம். தலைநகர் டில்லியை கடந்த பத்து ஆண்டுகளாக தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லையே உங்களால். அதுவே எவ்வளவு பெரிய அவமானம் உங்களுக்கு... தமிழகத்தில் கவர்னரை வைத்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பது போல டில்லியிலும் ஆம் ஆத்மிக்கு எதிராக கவர்னரை வைத்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தீர்கள். எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாத வண்ணம் முட்டுக்கட்டை போட்டு கொண்டே வந்தீர்கள். இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன மக்கள் வளர்ச்சிப் பணிகளை எதிர்பார்த்து இப்போது உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவ்வளவே... நீங்கள் பீற்றிக் கொள்வது போல் இது உங்களுடைய வெற்றி அல்ல. ஏனெனில் கடந்த பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தும் உங்களால் டில்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையே. மேலும் ஆம் ஆத்மி மேல் குற்றச்சாட்டுகள் தான் விசாரணை கட்டத்தில் உள்ளனவே ஒழிய எதுவும் நிரூப்பிக்கப்படவில்லை. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி செய்த பெரிய தவறு இண்டி கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் கூட்டணி அப்படியே சட்டசபை தேர்தல்களிலும் தொடர்ந்திருக்க வேண்டும். அது அதில் இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சி உள்பட தலைவர்களிடம் இருந்த நான் பெரியவன் என்ற அகந்தையும் காரணம்.


பேசும் தமிழன்
பிப் 09, 2025 11:27

அப்படி பார்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே போகாமல் இருந்து இருந்தால்..... இண்டி கூட்டணி ஆட்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது.... இங்கே அதிமுக மற்றும் பிஜெபி வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு.... இண்டி கூட்டணி ஆட்கள் வாங்கிய ஓட்டுக்களை விட அதிகம்.


guna
பிப் 09, 2025 13:00

பாவம் ஓவியர்...சீமான் கிட்டா தொடைநடுங்கி, பணபலம் கொண்டு தேர்தலில் வென்று வீண் பேச்சு......தமிழகத்தில் மரண அடி காதிருகு


Mediagoons
பிப் 09, 2025 09:06

பதிவானது வெறும் 60%. பாஜ பெற்றது பதிவானதில் 50% திர்க்கும் குறைவு. மோடியையும் பாஜவையும் 70% வாக்காளர்கள் நிராகரித்துவிட்டனர் .


பேசும் தமிழன்
பிப் 09, 2025 11:28

இப்படி எதையாவது சொல்லி மனதை தேற்றி கொள்ள வேண்டியது தான்.... இருக்கவே இருக்கு 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை