உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக ஐயப்பன் சங்கமத்துக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: கேரள பாஜ கடும் எதிர்ப்பு!

உலக ஐயப்பன் சங்கமத்துக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: கேரள பாஜ கடும் எதிர்ப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சூர்: உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்த கேரள அரசுக்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உலக ஐயப்பன் சங்கமம் மாநாடு பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. திருவாங்கூர் தேவஸ்தானமும், கேரள அரசும் இணைந்து நடத்ததும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கேரள அமைச்சர் வாசவன் அழைப்பு விடுத்தார். கேரள அரசின் இந்த செயலுக்கு பாஜ கடும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் முன்வைத்துள்ளது. பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் அறிக்கை:சபரிமலை பாரம்பரியத்தையும், ஐயப்ப பக்தர்களையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவமதித்துள்ளார். ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள். ஹிந்துக்களையும் இந்து நம்பிக்கையையும் அவமதித்த பிறகு, இப்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வந்துள்ளனர். இந்த செயல் அனைத்தும் ஓட்டு வங்கிக்காக மட்டும் தான். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக போன்ற இண்டி கூட்டணி கட்சிகள் சபரிமலை நிகழ்ச்சிக்கு செல்வது, ஹிட்லர் யூதர்களை கொண்டாடுவது போன்றது. ஒசாமா பின் லேடன் சமாதானத்தின் தூதராக மாறுவது போன்றது. இது தேர்தல் நேரத்தில் மக்களை முட்டாளாக்கும் செயல் என்று கேரள மற்றும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்; இண்டி கூட்டணியினர் ஹிந்து மத நம்பிக்கையாளர்களுக்கு சொன்னதையும், செய்ததையும் மறக்க மாட்டார்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Mecca Shivan
ஆக 24, 2025 19:36

கம்யூனிச கேவலங்கள்


Natarajan Ramanathan
ஆக 24, 2025 01:21

நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவசியமே இல்லை.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 24, 2025 00:13

சந்தனம் தடவிக் கொண்டால் எரிச்சல் தணிய வாய்ப்பு உள்ளது


Jack
ஆக 24, 2025 11:20

எந்த சந்தனம் என்பதை பொறுத்தது ?


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 24, 2025 00:12

ஐயப்பனுக்கு இது தெரியுமோ?


Anbuselvan
ஆக 23, 2025 23:16

அய்யப்பன் சுவாமி மிகத் தூய்மையையும் ஸ்ரத்தையான விரத அனுஷ்டிப்பதையும் விரும்புபவர்.


Anantharaman Srinivasan
ஆக 23, 2025 22:52

உண்மையில் சொரணையுள்ள நாத்திகன் இந்த அழைப்பை உதாசீனப்படுத்துவான்.


Tamilan
ஆக 23, 2025 22:49

திராவிட நாயகர்களைப்பார்த்தால் ஒருசில மதவாத கும்பலுக்கு கிலி


Jack
ஆக 24, 2025 11:21

நாயகரா ..நாயக்கரா ?


Kumar Kumzi
ஆக 23, 2025 22:42

இந்துமத ஜென்ம விரோதி ஓங்கோல் துண்டுசீட்டு அழைத்து ஐயப்பனை அசிங்கப்படுத்த வேண்டாம்


c.mohanraj raj
ஆக 23, 2025 21:36

வர வர கேரள முதலமைச்சர் தற்குறிகள் ஆகிவிட்டார்கள் போல


தமிழ்வேள்
ஆக 23, 2025 21:36

அல்லேலூயா டிக்கெட்டுகளுக்கு ஐயப்பன் மாநாட்டில் என்ன வேலை? வழக்கம் போல ஐயப்ப ஸ்வாமியை கேவலப்படுத்தி ஏதாவது பேசி... சாரி..உளறி வைப்பது சுடலையண்ணாவின் ஃபேஷன்.. அதனால் ஓட்டு குறையப்போவது கம்மி கும்பலுக்கும் கான் கிராஸ் கும்பலுக்கும் தான்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை