உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ., ஆட்சி: பிரசாந்த் கிஷோர் கணிப்பு

மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ., ஆட்சி: பிரசாந்த் கிஷோர் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த முறையை போல் இந்த முறையும் தொகுதிகள் கிடைக்கக்கூடும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் ஆங்கில மீடியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாம் அடிப்படையை பார்க்க வேண்டும். தற்போதைய அரசு மற்றும் அதன் தலைவர் மீது கோபம் இருந்து அதற்கு மாற்று இருந்தால், யாருக்கு ஓட்டுப் போடுவது என மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால், பிரதமர் மோடிக்கு எதிராக கோபம் உள்ளதாக நாம் கேட்கவில்லை. ஏமாற்றம், நிறைவேறாத கோரிக்கைகள் இருக்கலாம். ஆனால், பரவலான கோபம் உள்ளதாக தெரியவில்லை.ஒருவர் வந்தால், நமது வாழ்க்கை மேம்படும் என மக்கள் நினைக்கும் போது தான் , ஒருவர் சவால் விட முடியும். ராகுல் வந்தால், தங்களது வாழ்க்கை மேம்படும் என மக்கள் நினைப்பதாக என நாம் கேள்விப்படவில்லை. அவரது ஆதரவாளர்கள் வேண்டுமானால் அப்படி கூறலாம். ஆனால், அடிப்படை மட்டத்தில் இருந்து நான் பேசுகிறேன். அரசுக்கு எதிரான பரவலாக கோபமும் இல்லை. சவால் விடும் அளவுக்கு யாரும் இல்லை. இதனால், எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்கும் என நான் கருதவில்லை.நாட்டின் மேற்கு, வடக்கு பகுதிகளில் 325 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 2014 முதல் பா.ஜ., வலுவாக உள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 225 தொகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த காலங்களில் பா.ஜ., சிறப்பாக செயல்படவில்லை. 50க்கும் குறைவான எம்.பி.,க்களே உள்ளனர்.வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே பா.ஜ.,வுக்கு தோல்வி ஏற்படும். ஆனால், அப்படி நடக்கும் என நான் கருதவில்லை. கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பா.ஜ.,வின் ஓட்டும் மற்றும் தொகுதிகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தமிழ்வேள்
மே 21, 2024 17:13

ஈஸ்வர் கமல் பெரும்பான்மை இல்லாமல் போனால் ,மீண்டும் இஸ்லாமிய தீவிரவாதம் ,மதமாற்று அக்கப்போர் ,திருட்டு திமுக மாதிரி போதை வியாபார கட்சிகள் அட்டகாசம் செய்யும் அது உங்களுக்கு உடன்பாடானதா ?


Ramanujadasan
மே 21, 2024 16:47

பிஜேபி மட்டுமே தொகுதிகளில் ஜெயிக்கும், கூட்டணிகள் ஒரு ஐம்பது மொத்தம் நிச்சயம்


Ramanujadasan
மே 21, 2024 16:45

நிச்சயம்


Kishore
மே 21, 2024 16:37

Boss, Please communicate with your Ex Business partner DMK


Easwar Kamal
மே 21, 2024 16:23

மோடி மீண்டும் வரலாம் ஆனால் பெரும்பான்மை கிடைகக்கூடாது போனமுறை பெரும்பான்மை கிடைது என்ன பயன் எதிர் காட்சிகளை மிரட்டவே நேரம் சரியாக இருந்தது பெரும்பான்மை இல்லமால் இருந்தால்தான் வேலையில் கவனம் varum


K Mohan
மே 21, 2024 15:27

Once more Modiji will come with more power and strength because the opposition is scattered and does not can stand to the stature of Modi


குமரி குருவி
மே 21, 2024 14:58

பிழைப்புக்கு வழி தரும் கட்சிகள் தலைமை வெற்றி பெறாது தோற்கும் பிரசாந்த் கிஷோர் பயமுறுத்துவது ... தி.மு.க.போன்ற கட்சிகளை சோர்வடைய செய்யாதா...


sri
மே 21, 2024 18:42

அவர் திமுகவிற்கு சாதகமாக பேச வேண்டும் என்கிறீர்களா?


GMM
மே 21, 2024 14:50

கேரளா, தமிழகம், பஞ்சாப், மேற்கு வங்கம் தேச விரோத, பிரிவினை, ஊழல் கும்பல் அதிகம்? மாநில அதிகாரம் மூலம் சுய நலம் பெற்று விட்டனர் மற்ற மாநில வாக்காளர்கள் வளர்ச்சி, பாதுகாப்பின் நன்மையை உணர்ந்து விட்டனர் இதற்கு பிஜேபி முக்கியத்துவம் தருகிறது முத்தலாக், சட்ட விரோத பிரிவு நீக்கம், பண மதிப்பு, அரசியல் ஊழல் ஒழிப்பில் போராட்டம், குழப்பம் இல்லாமல் தீர்வு சிந்திக்க செய்யும் கிஷோரின் கணிப்பு சரியாக இருக்க வேண்டும்


tmranganathan
மே 21, 2024 14:37

மோடி வேண்டும் மீண்டும் வேண்டும் இது பெருவாரியான இந்தியா மக்களின் கோஷம் அவர்தான் ஜெயிச்சு ஆட்சி அமைப்பார் இந்தி கோஷ்டியில் பவார், கார்கே, சோனியா, ராகுல் போல எஸ்பிஐரே ஆனா ஐட்டம்தான் உள்ளன ippadiye போனால் தேர்தலிலும் பாஜகதான் மீண்டும் வெல்லும் மக்கள் மேம்பாட்டு அடைவார்கள் இப்போ போலெ


சசி தனபால்
மே 21, 2024 14:26

நாட்டின் தற்போதைய உண்மை நிலவரத்தை பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்