உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மேந்திர பிரதானுக்கு பாஜ என்றும் உறுதுணையாக இருக்கும்: நிதின் நபின்

தர்மேந்திர பிரதானுக்கு பாஜ என்றும் உறுதுணையாக இருக்கும்: நிதின் நபின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தர்மேந்திர பிரதானுக்கு கட்சி உறுதுணையாக இருக்கும் என்று பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் கூறி உள்ளார்.நீட் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், மதிப்பெண் குளறுபடிகள் ஆகியவற்றை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரியும் டில்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் மத்திய அரசு தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது. போராட்டம், பேச்சுவார்த்தை என்ற சூழலுக்கு மத்தியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை இன்று ராஜினாமா செய்தார். தனது 2 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை அவர் பிரதமர் மோடிக்கும் அனுப்பி வைத்துள்ளார். இந் நிலையில், தர்மேந்திர பிரதானுக்கு கட்சி உறுதுணையாக இருக்கும் என்று பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் கூறி உள்ளார். தமது எக்ஸ் வலைதள பதிவில் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா முடிவை மேற்கோள் காட்டி அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது; மத்திய கல்வித்துறை அமைச்சராக, நாட்டின் கல்வியை சீரமைப்பதிலும், வரலாற்று சிறப்புமிக்க தேசிய கல்விக் கொள்கைளை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் தர்மேந்திர பிரதான் முக்கிய பங்கை ஆற்றினார். பல்வேறு நலன்களை முன்னிறுத்தி அவர் பதவியில் இருந்து விலக எடுத்த முடிவு, பொது வாழ்வில் நேர்மை, தன்னலமற்ற சேவையின் மிக உயர்ந்த நிலையை வெளிக்காட்டுகிறது. அவரின் முடிவுக்கு கட்சி என்றைக்கும் உறுதுணையுடன் நிற்கிறது. தர்மேந்திர பிரதானின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.இவ்வாறு நிதின் நபின் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

விருமாண்டி
ஜூலை 26, 2026 14:05

கோரிக்கைகளை நிறைவேற்றாவிடின் பிரதமர் பதவிக்கே ஆபத்து வந்துவிடும் என்று அபிஜித் தீப்கே மேடையில் சவால் விட்டதற்கு சில மணி நேரங்களில் பிரதான் பதவி பிடுங்கப்பட்டது. The classic David versus Goliath moment.


kamaraj jawahar
ஜூலை 26, 2026 09:38

தமிழகத்திற்கு வர வேண்டிய பணத்தை தடுத்தவர்


பல்லவி
ஜூலை 26, 2026 08:09

ஒரே கூட்டம் கண்டிப்பாக பதவியில் இருக்க வைப்பார்கள் திரு பிரதானுக்கு பிரதமர் பதவி கொடுத்து பெருமைப்படுத்தலாம் .


Kasimani Baskaran
ஜூலை 26, 2026 06:31

அண்ணாமலைக்கும் கூட இவர்கள் உறுதுணையாக நின்றார்கள்... நல்ல காமடி.


விருமாண்டி
ஜூலை 25, 2026 20:13

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கரை ஒரு லஞ்ச் ப்ரேக்கில் தூக்கியடித்த பாவத்தின் கர்மா.


நேர்சாமி
ஜூலை 25, 2026 20:04

36 நாட் களுக்கப்புறம் பொது வாழ்வில் நேர்மை வந்திருக்கு.


Natarajan
ஜூலை 26, 2026 07:20

No. The students and politicians should not decide the educational polices. It should be done by the highly educated people. This is a bad policy based on the political convenience. Even a film director had a opinion here. That is bad for the country.


Balamurugasundaram Somasundaram
ஜூலை 25, 2026 19:55

ஏபிவிபி மாணவர்கள் எப்போதும் அறிவு, ஒழுக்கம், நேர்மைக்கு பாத்திரமான வீரர்களாவார்


உண்மை கசக்கும்
ஜூலை 25, 2026 19:21

அடுத்த குடியரசு தலைவர்


S. Venugopal
ஜூலை 25, 2026 18:36

கல்வித்துறையில் உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டவர்களில் பலர் எ பி வி பி இன் சிபாரிசினால் வந்தவர்கள் என்று பலர் பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் திறமையாகவும் பணிபுரியவில்லை என்றும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.


C.SRIRAM
ஜூலை 25, 2026 20:11

எந்த மக்கள் ...?. கருத்து என்கிற பெயரில் உளறக்கூடாது


krish
ஜூலை 25, 2026 23:37

வீணா போன வேணு என்று உங்கள் தெருவில் பேசிக்கொள்கிறார்கள்


S. Venugopal
ஜூலை 26, 2026 12:48

திரு தர்மேந்திரா பிரதான் அவர்கள் பெட்ரோலியம் துறை அமைச்சராக இருந்தபொழுது கொல்கத்தா விலிருந்து திப்ரூகர்க்ஹ் க்கு கச்சாஎண்ணெய் கொண்டுவர குழாய் அமைத்து திப்ரூகர்க்ஹ் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையினை புத்துயிர் பெறச்செய்து மிகப்பெரிய சாதனை படைத்தவர். அசாம் மாநிலத்திற்கும் நமது நாட்டிற்கும் இந்த பணி மிகவும் இன்றியமையாத ஒன்று. தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திறம்பட செயல் படுத்தினர். இவ்வளவு திறமையும் தொலை நோக்கு பார்வையும் உள்ள ஒருவருக்கு ஏன் இந்த சிக்கல்? சற்று நினைத்துப் பார்க்கவும். பழி ஓரிடம் பாவம் ஒரு பக்கம்.


Prem Kumar
ஜூலை 25, 2026 17:49

என்னைப் போல் பொது மக்களில் பலரும் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதை விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்வதில் இருந்து இது தடுக்க உதவும். காங்கிரஸ் முன்னெடுத்த ஒரு அரசியல் நகர்வு என்பதால் இதற்கு பாஜகவும் தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாகவே செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது. நாடாளு மன்றத்தில் வரும் திங்கட்கிழமை காங்கிரஸ் எவ்வாறு செயல்படப் போகிறது என்பதைப் பார்க்க நாம் காத்திருப்போம்.


C.SRIRAM
ஜூலை 25, 2026 20:15

உண்மை . அரசு பணிந்திருக்கக்கூடாது . தவறான முன்னுதாரணம் . வெட்டிகள் சிலர் ஓன்று சேர்ந்து அரசை மிரட்டுவதுபோல உள்ளது . விரட்டிஅடித்திருக்கவேண்டும்


முக்கிய வீடியோ