உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன், பா.ஜ., மகளிர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மஹிளா சம்மான் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக டில்லி பெண்களை கெஜ்ரிவால் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டி கோஷமிட்டனர்.“பஞ்சாப் தேர்தல் வாக்குறுதியிலும் இதே திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை நிறைவேற்றப்படவில்லை,”என, பா.ஜ., மகளிர் அணி தலைவி ரிச்சா பாண்டே கூறினார்.முன்னதாக, அசோகா சாலையில் இருந்து பெரோஷா சாலையில் உள்ள கெஜ்ரிவால் வீட்டுக்கு பேரணியாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !