உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளுக்கு அவமானம்: கங்கனா கருத்துக்கு ராகுல் கண்டனம்

விவசாயிகளுக்கு அவமானம்: கங்கனா கருத்துக்கு ராகுல் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'விவசாயிகளை தொடர்ந்து பா.ஜ., அரசு அவமானப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ., எம்.பி.,யின் கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானம்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜ., அரசு தவறிவிட்டது. விவசாயிகளை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. தங்களின் 378 நாள் போராட்டத்தில் 700 சக விவசாயிகளைத் தியாகம் செய்தவர்கள் அந்நிய நாட்டு சதிகாரர்கள் என்று பா.ஜ., எம்.பி., கூறுவது பா.ஜ., அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுள்ள மனநிலையை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானம்.

நிவாரணம்

உயிரிழந்த விவசாயிகளுக்குப் பாராளுமன்ற அவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தக் கூட மோடி மறுத்துவிட்டார். போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உருவாக்கிய கமிட்டி இன்னும் செயல்படாமல் உள்ளது. இதுநாள் வரை தங்களின் நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை. இதற்கெல்லாம் உச்சமாக விவசாயிகளைத் பா.ஜ., தவறாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார். பா.ஜ., எம்.பி., கங்கனா, போராட்டம் நடத்திய விவசாயிகள் குறித்து தெரிவித்த கருத்துக்கு, ராகுல் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார். கங்கனாவின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை; கட்சி சார்பில் பேச கங்கனாவுக்கு அதிகாரமும் இல்லை என்று பா.ஜ., விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

kuppusamy India
ஆக 27, 2024 16:42

இவர் நாட்டுக்கு அவமானம்


ஆரூர் ரங்
ஆக 27, 2024 15:32

போலி விவசாயிகள் போராட்டத்தின் மூலம் காலிஸ்தான் ஆதரவாளர் எம்பி யாக ஆனதற்கு இவர்தான் காரணம் .இட்டாலி க்கு நாடு கடத்துங்கள்.


karthik
ஆக 27, 2024 14:05

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த துடிக்கிறார்.


எவர்கிங்
ஆக 27, 2024 12:59

ராகுல் தேசத்துக்கு அல்ல பிரபஞ்சத்துக்ககே அவமானம்


nagendhiran
ஆக 27, 2024 12:50

டேய் தற்குறி பப்பு? நானும் விவசாயிதான்? ஒரு நாள் வெளியூர் செல்வதற்கே எனக்கு நேரம் இருக்காது?


Anand
ஆக 27, 2024 12:33

பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டிக்க வக்கில்லாத..., விவசாயிகள் என்கிற பெயரில் புல்லுருவிகளையும், தீவிரவாதிகளையும் ஏவிவிட்டு குளிர்காய்ந்த சம்பவனத்தை புட்டு புட்டு வைத்ததை தாங்கிக்கொள்ளமுடியாமல் பொங்குகிறான், இவனை உள்ளே வைத்து லாடம் கட்டவேண்டும். கேடுகெட்ட இழிபிறவி.


mindum vasantham
ஆக 27, 2024 12:24

விவசாயிகள் என்ற போர்வையில் கலவரம் செய்வது கூடாது ,Nam நாட்டில் ஜன நெருக்கடி அதிகம் விவசாயம் என்பது 10 ஆசிரி மேல் வைத்திருப்பவர்கள் மட்டுமே செய்யலாம்


sankar
ஆக 27, 2024 12:21

நீ இந்த தேசத்தின் அவமான சின்னம்


Anand
ஆக 27, 2024 11:57

கங்கனா கூறுவது உண்மை.


Anand
ஆக 27, 2024 11:56

தொலைந்து போன வெள்ளையன் மீண்டும் வேறு ரூபத்தில் இவ்விடம் கோலோச்சுவது இந்நாட்டிற்கு அவமானம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை