உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ., வெற்றி: ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணிக்கு அதிர்ச்சி!

சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ., வெற்றி: ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணிக்கு அதிர்ச்சி!

சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ., கட்சியின் ஹர்பிரீத் சிங் கவுர் பப்லா 2 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பொது தலைநகர் சண்டிகர். அதன் மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி ஒரு அணியாகவும், பா.ஜ., தனி அணியாகவும் உள்ளன.ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணியின் 8 ஓட்டுகள் செல்லாது என்று கூறி, பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நடந்த விசாரணையின்போது, தேர்தல் அதிகாரிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.தேர்தல் குளறுபடி தொடர்பான வீடியோ காட்சிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அனைவரும் முன்பாகவும் திரையிடப் பட்டது. இதன் பின்னர், நீதிபதிகள், தேர்தல் அதிகாரி அனில் மாஷி மிகப்பெரிய தவறு செய்து தனது அதிகார வரம்பை மீறியும், விதிமுறைகளை மீறியும் செயல்பட்டு உள்ளார் என முடிவு செய்து முந்தைய தேர்தல் முடிவுகளை சட்டவிரோதம் எனக்கூறி ரத்து செய்தனர். தேர்தல் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.இந்நிலையில் மீண்டும் மேயர் தேர்தல் நடந்தது. இன்று (ஜன.,30) மேயர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் பா.ஜ., கட்சியின் ஹர்பிரீத் சிங் கவுர் பப்லா வெற்றி வாகை சூடினார். 36 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி- காங்கிரஸ் வேட்பாளர் பிரேம் லதாவை இரண்டு ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.பா.ஜ., வேட்பாளர் ஹர்ப்ரீத் கவுர் பப்லா 19 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து, காங்கிரஸ் கட்சியினர் ஆதரவுடன் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பிரேம் லதா 17 ஓட்டு பெற்று தோல்வி அடைந்தார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஜெய்ஸ்ரீ தாக்கூர், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர் உள்ளிட்டோர் கண்காணிப்பில் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர்கள், காங்கிரஸ் 6 கவுன்சிலர்கள், பா.ஜ., 16 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். மேயர் தேர்தலில் எம்.பி.,க்கு (காங்கிரஸ்) ஒரு ஓட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anbuselvan
ஜன 30, 2025 19:09

சரியான அப்பாடக்கரா இருக்காங்கப்பா


Azar Mufeen
ஜன 30, 2025 16:16

தி. மு. க, பிஜேபி இரு கட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை, பணம் இருக்க பயமேன்


veera
ஜன 30, 2025 15:20

இது போன்ற இன்ப அதிர்ச்சி கொடுப்பார்களா ஈரோடு மக்கள்....


Barakat Ali
ஜன 30, 2025 14:14

Wherever the cong. Aam Admi in alliance, BJP has strong vote bank there. Nothing can improve congress unless a miracle happens. Sympathetic.


Palanisamy Sekar
ஜன 30, 2025 14:04

ரோஷமுள்ள காங்கிரஸ்காரனோ அல்லது ஆம் ஆத்மீயில் யாரோ இருக்கின்றார்கள். டெல்லியில் அடித்துக்கொள்கின்றார்கள். இங்கே எப்படி ஒட்டி உரசிக்கொள்வார்கள்? அதனாலேயே ரோஷமுள்ள இரண்டுபேர் மாற்றி ஓட்டுபோட்டிருப்பார்கள் போலும். அல்லது பாஜகவின் அணுகுமுறை அவர்களை ஈர்த்திருக்கும். பணமுள்ளவரும் அல்ல பாஜக வேட்பாளர், திமுகவினரைப்போல. எப்படியோ நல்லது நடந்திருக்கு, வாழ்த்துவோம்.


Ramesh Sargam
ஜன 30, 2025 13:42

இரண்டே வோட்டுக்களில் அடங்கியது ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி திமிர்.


Duruvesan
ஜன 30, 2025 13:37

காசு, துட்டு,ED, police, CBI


Ganapathy
ஜன 30, 2025 14:05

சாராய பைசா, காலிஸாதானி பைசா, கள்ளக்குடி ரோஹிங்கியா, பெண் எம்பி தாக்குதல், என்னைக் கொல்ல சதி அழுவாச்சி, தில்லியை பாரீஸாக்குவேன் சிங்கப்பூராக்குவேன் னு புளுகல், வீட்ல குழாய் தண்ணி வரவெப்பேன்னு புளுகல், கவர்னர் புடிக்கலேன்னு அழுவாச்சி, பஞ்சாப்ல பயிரை எரிச்சா வாய்ல லட்டு ஆனா தீவாளிக்கு வெடி விடக்கூடாதுன்னு கூவல்,....


veera
ஜன 30, 2025 14:25

எல்லாம் ஈரோடு