உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்த பா.ஜ., வேட்பாளர்: காரணம் என்ன?

தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்த பா.ஜ., வேட்பாளர்: காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: பா.ஜ., முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், அசன்சோல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்பூரி பாடகர் பவன் சிங், தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என அறிவித்துள்ளார். பெண்களை பற்றிய ஆட்சேபனை குறிப்புகளுடன் பாடல் பாடியதாக அவர் மீது புகார் எழுந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.லோக்சபா தேர்தல் அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், நேற்று( மார்ச் 02) பா.ஜ., கட்சியானது 195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அதிரடியாக வெளியிட்டு, இன்னும் கூட்டணியே முடிவு செய்யாமல் திணறிக் கொண்டு இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6bdpgxhe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார். மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்ட 34 அமைச்சர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதியில் இருந்து போஜ்புரி மொழி நடிகரும்- பாடகருமான பவன் சிங் பெயரும் இடம்பெற்று இருந்தது.ஆனால், இன்று தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என பவன் சிங் கூறியுள்ளார். எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: என் மீது நம்பிக்கை வைத்து அசன்சோல் தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த பா.ஜ., மேலிடத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், சில காரணங்களுக்காக இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

காரணம் என்ன?

இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: பவன் சிங் பெயர் அறிவித்ததுமே, மேற்கு வங்க பெண்களை பற்றி ஆட்சேபனைக்குரிய வகையில் பவன் சிங் பாடல் எழுதி பாடியது குறித்து பலரும் சுட்டிக்காட்டினர். சமூக வலைதளங்களிலும் இதனை பதிவிட்டனர். இது பா.ஜ.,வின் கவனத்திற்கும் சென்றுள்ளது. பவன் சிங்கை நிறுத்தினால் வெற்றி சந்தேகம் என்ற நிலை உருவானதால் அவரை திரும்ப பெற்றுக் கொள்ள பரிசீலனை செய்யப்பட்டது. இது பற்றி பவன் சிங்கிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் தான் பவன் சிங்கும் போட்டியிடப்போவது இல்லை என அறிவித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்