உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்ஜெட்டை தள்ளிவைக்க கவர்னரிடம் பா.ஜ.வினர் மனு

பட்ஜெட்டை தள்ளிவைக்க கவர்னரிடம் பா.ஜ.வினர் மனு

பெங்களூரு : 'பிப்ரவரி 16ல், பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டாம்' என, கவர்னரிடம் பா.ஜ. குழுவினர் மனு அளித்தனர்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. சமீபத்தில் முதல்வரின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், 2024 - 25ம் ஆண்டின் பட்ஜெட்டை, பிப்ரவரி 16ல் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.இதே நாளில், பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் இருந்து, கர்நாடக சட்டமேலவைக்கு இடைத்தேர்தல் நடத்துவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே பட்ஜெட் தாக்கலை தள்ளிவைக்கும்படி, பா.ஜ. வலியுறுத்துகிறது.முன்னாள் அமைச்சர்கள் அஸ்வத் நாராயணா, சுனில்குமார், முனிரத்னா, பைரதி பசவராஜ் உட்கொண்ட பா.ஜ. குழுவினர், நேற்று ராஜ்பவனுக்கு சென்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, பட்ஜெட் தாக்கலைத் தள்ளிவைக்கும்படி வேண்டுகோள் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை