உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛இந்தியாவின் தாய் இந்திரா: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி

‛இந்தியாவின் தாய் இந்திரா: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி

திருவனந்தபுரம்: முன்னாள் பிரதமர் இந்திராவை இந்தியாவின் தாய் எனவும், கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனை தனது அரசியல் குரு எனவும் பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.கேரள மாநிலம் புங்குன்னத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாகரனின் நினைவுச்சின்னமான முரளி மந்திரத்தை சுரேஷ் கோபி பார்வையிட்டார்.பிறகு அவர் கூறியதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா, இந்தியாவின் தாய். கருணாகரன், திறமையான நிர்வாகி. அவரும், கம்யூ., கட்சியை சேர்ந்த கேரள முன்னாள் முதல்வர் நாயனாரும் எனது அரசியல் குருக்கள். எனது வருகையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம். எனது குருவுக்கு மரியாதை செலுத்தவே இங்கு வந்தேன். நாயனார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ள உறவை போல் கருணாகரனின் குடும்பத்தினருடனும் எனக்கு உறவு உள்ளது. கருணாகரன், கேரள காங்கிரசின் தந்தையாக இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், கருணாகரனின் மகன் முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

venugopal s
ஜூன் 16, 2024 13:02

கேரளாவின் புதிய பப்பு இவர் தானோ?


முருகன்
ஜூன் 15, 2024 21:09

உன்மையை அனைவருக்கும் புரிய வைத்ததற்கு நன்றி


Ramesh Sargam
ஜூன் 15, 2024 20:41

குருமார்களுக்கு மரியாதை செலுத்துவதுபோல, உங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்த மக்களுக்கும் நீங்கள் மரியாதை செய்யவேண்டும். அப்படி என்றால், அவர்கள் காலில் விழவேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு இருக்கும் பல பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசி தீர்வு காணுங்கள் என்று சொல்கிறேன். அவ்வளவுதான். ஸ்ரீ குருப்யோ நமஹ.


kulandai kannan
ஜூன் 15, 2024 19:54

அனுகூல சத்துரு. மடியில் கட்டிய பூனை. சினிமாக்காரர்களைத் தவிர்ப்பது பாஜகவுக்கு நல்லது.


V RAMASWAMY
ஜூன் 15, 2024 19:23

இவர் பா ஜ க டிக்கெட்டில் தானே வெற்றி பெற்றார்?


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 19:06

இந்திரா பாரதமாதாவின் தாயா? என்னடா இந்த பாரதத்துக்கு வந்த சோதனை?. ஏற்றி வைத்த ஏணியான காமராசர் ஐயாவையே அவமதித்த பெண்மணி.


Thirumoolar
ஜூன் 16, 2024 02:14

நீங்கள் சொல்வது சரி, இந்திரா பாரதமாதாவின் தாயா? என்னடா இந்த பாரதத்துக்கு வந்த சோதனை?. இந்திரா ஜெயா கருணாநிதி போன்றவர்கள் நம்மை மாயத்தோற்றத்தில் வைத்துவிட்டார்கள்


J.V. Iyer
ஜூன் 15, 2024 19:04

அடேடே இவருக்கு நன்றாக அரசியல் செய்ய வந்துவிட்டது. பலே


vijay
ஜூன் 15, 2024 18:54

பாத்துகிட்டே இருங்க இந்த ஆள் பிஜேபி க்கு மிக பெரிய தலைவலியாக மாற போகிறார் . தேவை ல்லாத விஷயங்களை பேசுவதை குறைத்தால் இவருடைய அரசியல் எதிர் காலத்திற்கும் பிஜேபி க்கும் நல்லது . இல்லையேல் தூக்கி ஏறியப்படுவார் ....பதவி ஏற்ற உடனே எனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று சொன்னார் பின் அதை மறுத்தார் . பத்திரிக்கை காரர்களிடம் சண்டை , எல்லாவற்றிலும் கருத்து கூறுவது பின் அது சர்ச்சை ஆகிறது என்பது இவருடைய வாடிக்கை ஆகிவிட்டது .


என்றும் இந்தியன்
ஜூன் 15, 2024 18:44

இவரெல்லாம் பிஜேபி ஆட்சியில் மத்திய அமைச்சர்???இந்திராவின் வண்டவாளம் தெரியாதவரா இவர்???


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 16:51

இதே போன்று இந்திராவை நாட்டைக் காத்த துர்கா எனப் புகழ்ந்தார் வாஜ்பாயி. அவசர நிலைக் காலத்தில் அதே இந்திராவால் மிசாவில் சிறையில் தள்ளப்பட்டார்.


Senthoora
ஜூன் 15, 2024 17:32

உப்பை தின்றவர் தண்ணீர் குடிக்கணும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை