உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெட்ரோலில் எத்தனால் கலப்பு; மனித குலத்துக்கு கிடைத்த மகத்தான வாய்ப்பு!

பெட்ரோலில் எத்தனால் கலப்பு; மனித குலத்துக்கு கிடைத்த மகத்தான வாய்ப்பு!

புதுடில்லி: சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும், வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், மதிப்பு மிக்க அந்நியச் செலாவணியை பாதுகாக்கவும் நமக்கு கிடைத்திருக்கும் நல்வாய்ப்பாக பெட்ரோலில் எத்தனால் கலக்கும் நடைமுறை அமைந்துள்ளது. பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால், வாகனங்களின் மைலேஜ் குறையும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவியது. இத்தகைய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.'எத்தனால் கலந்த பெட்ரோலால் பாதிக்கப்பட்டதாக ஒரு புகார் கூட கிடையாது. ஏதேனும் ஒரு வாகனத்தை காட்ட முடியுமா' என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சவால் கூட விட்டுப்பார்த்தார். அப்படியும் யாராலும் எந்த புகாரும் கூற முடியவில்லை.

எத்தனால் கலப்பு என்பது என்ன?

எத்தனால் என்பது புதுப்பித்தக்க உயிரி எரிபொருள்; இதை பெட்ரோலில் கலப்பதன் மூலம் காற்று மாசு குறைகிறது. சர்வதேச தர அடிப்படையில் இது செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு 5 ஆண்டுகள் முன்னதாகவே இந்த எத்தனால் கலப்பை இந்தியா செய்து சாதனை படைத்துள்ளது.எத்தனால் கலந்த பெட்ரோல் நன்மைகள் ஏராளம் உள்ளன என்பதே யதார்த்தம். 20% எத்தனால் கலந்த பெட்ரோலால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு: * பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் வாகனங்களில் இருந்து கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு கட்டுப்படுத்தப்படுகிறது. அந்நியச் செலாவணியை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து பெட்ரோலியம் இறக்குமதி செய்வதையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு அவர்களது விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்க உதவிகரமாக இருக்கிறது.* எத்தனால் கலந்த பெட்ரோல், வாகனங்களின் இயந்திரத்திற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது. இது பற்றிய சமூக வலைதள வதந்திகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று மத்திய அரசும், சர்வதேச நிபுணர்களும் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.* எத்தனால் கலந்த பெட்ரோலில் இயக்கப்பட்ட வாகனங்களை ஒரு லட்சம் கிலோமீட்டர் வரை இயக்கி சோதனை செய்து பார்த்தபோது, வாகனங்களின் செயல் திறனில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.* எத்தனால் கலந்த பெட்ரோல், வாகன மைலேஜில் ஒரு சிறிய குறைவை மட்டுமே ஏற்படுத்துகிறது. இதை இன்ஜினை முறையாக ட்யூன் செய்தாலே சரி செய்து விட முடியும்.* 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் என்பது சான்றளிக்கப்பட்ட, படிப்படியாக மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட எரிபொருள் ஆகும். இது கலப்படம் கிடையாது.* இரண்டாம் தலைமுறை எத்தனால் என்பது, உணவு அல்லாத உயிரி பொருட்களில் இருந்து தயார் செய்யப்படும். இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.* எத்தனால் காரணமாக வாகனங்களில் தேய்மானம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.* பெட்ரோலை விட எத்தனால் மலிவானது என்று அறிவித்தது உண்மைதான் என்றாலும், அதன் பின்னர், எத்தனாலின் கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக எத்தனாலின் சராசரி விலை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் விலையை விட அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.

மவுசு கூடியது ஏன்?

பல நாடுகள் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மாறுவதற்கு மிகப்பெரிய காரணம், எத்தனால் என்பது ஒரு நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க உயிரி எரிபொருளாகும்இது கரும்பு, அரிசி, சோளம் போன்ற உயிரி மூலங்களை பதப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படலாம். அதிக மதிப்புள்ள கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதையும் வெகுவாகக் குறைத்துள்ளது.பெட்ரோலில் எத்தனால் கலப்பு மூலம் இந்தியாவுக்கு ரூ.1.44 லட்சம் கோடிக்கு மேல் அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் மட்டும் விவசாயிகளுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க உதவியுள்ளது.இவ்வாறு எத்தனால் கலப்பு செய்ததன் மூலம் 245 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் வாங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு கட்டுப்படுத்தப்பட்டதன் மூலம், 30 லட்சம் மரங்கள் நடப்பட்டதற்கான சுற்றுச்சூழல் பலன்கள் நமக்கு கிடைத்துள்ளது.இந்தியாவில் எத்தனால் பெரும்பாலும் விவசாய விளைப் பொருட்களிலிருந்து பெறப்படுவதால், பெட்ரோலில் எத்தனால் கலப்பது விவசாயத்துறை பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.E20 பெட்ரோல் (80% பெட்ரோல், 20% எத்தனால்) இப்போது இந்தியாவின் அனைத்து முக்கிய எரிபொருள் நிலையங்களிலும் பரவலாகக் கிடைக்கிறது.பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டம் 2003ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. நிலைப்புத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பலன்களை கொண்டுள்ள இத்திட்டம் இந்தியாவின் எரிசக்தி துறையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களாகிய நாம், உண்மையான தகவல்கள் அடிப்படையில் அறிவை மேம்படுத்தி, எத்தனாலுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் மட்டுமே, அது பற்றிய கட்டுக்கதைகளை உடைத்தெறிய முடியும்.

பிரேசில்

எத்தனால் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் பிரேசில், 1970ம் ஆண்டுகளில் இருந்தே இந்த மாற்றத்தை செய்து வருகிறது. தொடக்க காலத்தில் 10 முதல் 25 சதவீதம் மட்டுமே பெட்ரோலில் எத்தனால் கலந்த பிரேசில், எத்தனால் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வாகனங்களையும் அறிமுகம் செய்து விட்டது. இப்போதும் அந்த நாட்டில் 18 முதல் 27.5 சதவீதம் எத்தனாலை பெட்ரோலில் கலப்பது கட்டாயமாக உள்ளது.

அமெரிக்கா

நீண்ட காலமாக பெட்ரோலில் எத்தனால் கலப்பு முயற்சி இருந்தாலும், 1970க்கு பிறகு தான் அமெரிக்கா தீவிரமாக மேற்கொண்டது. பெட்ரோலிய இறக்குதியை குறைக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டது. முதலில் 10 சதவீதம் கலப்புடன் தொடங்கிய அமெரிக்கா, சில ஆண்டுக்கு பிறகு 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிற நாடுகள்

இந்த நாடுகள் மட்டுமின்றி, கனடா, ஆஸ்திரியா, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து நாடுகளிலும் வெவ்வேறு விகிதங்களில் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ethiraj
ஆக 15, 2025 07:29

Why it took 77 years to decide such inteligent decission. Golden quadrilateral,unigauge in railways,article 370,NEET,Ayodta delayed decades by congress govt Welldone BJP GOVT


MARUTHU PANDIAR
ஆக 14, 2025 22:04

அப்புரூவல் வாங்கியாச்சா?


MARUTHU PANDIAR
ஆக 14, 2025 22:01

2009-2012 வாக்கில் பொம்மை சிங்கின் இத்தாலிய ஆட்சியில் எத்தனால் கலக்க போறோம் அப்படீன்னு சும்மா வாய் கிழிய இதோ அதோன்னு சீன் போட்டாங்களே ஒழிய அவுங்களுக்கு எதோ காரணத்தால் எண்ணெய் இறக்குமதி அளவை குறைக்க மனது வர வில்லை. எல்லாத்துக்கும் இப்படி அதற்குரிய நபர்கள் வரணும் போல இருக்கு.


ديفيد رافائيل
ஆக 14, 2025 21:57

எத்தனால் கலக்கனும்னு முடிவு பண்ணிட்டீங்க அதுக்கு தான் இந்த மாதிரியான காரணம்


V.Mohan
ஆக 14, 2025 21:28

எத்தனால் கலப்பது சரி தான். ஆனால் மிகச்சிறந்த, சுற்றுச்சூழல் மாசு படாத எரி பொருளான ஹைட்ரஜன் பயன்பாட்டிற்கான ரிசர்ச் & டெவலப்மெண்ட்டில் இந்தியா பின் தங்கி உள்ளது. அதை முடுக்கி விட்டு பெருவாரியாக ஹைட்ரஜனுக்கு மாறினால் இந்த எண்ணெய் உற்பத்தி நாடுகளிடம் கையேந்த தேவையில்லை. நிறைய இந்தியர்கள் அடிப்படை ரிசர்ச் செய்து இருப்பதை முன்னெடுக்க முயற்சிக்கலாம். சரியோ தவறோ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சாமியாரின் சீடர் ஹைட்ரஜனில் இயங்கும் சமையல் ஸ்டவ் ஒன்றை கண்டுபிடித்து இயக்கி காண்பித்தார். அது போல நிறைய அடிப்படை கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைக்க அரசு முயலவேண்டும்.


GMM
ஆக 14, 2025 20:43

நகர்களில் வெட்டியாக இரு, நான்கு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றும் நபர்கள் அதிகம்.? கூட்ட நேரங்களில் பெரும் நெருக்கடி. கூட்ட நேரங்களில் சரக்கு வாகனங்கள் அனுமதி கூடாது. அரசு, அத்தியாவசிய பணி, தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்கி வரி செலுத்தும் நபர் நீங்கலாக மற்றவர்களுக்கு அந்நிய செலாவணி மூலம் மட்டும் அடக்க விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம் நகர்புற வாகன நெருக்கடி குறையும். எத்தனால் கலப்பு விவசாயிக்கு வருவாய் தரும். அந்நிய செலாவணி ஈட்டும்.


MARUTHU PANDIAR
ஆக 14, 2025 21:57

அப்போ கார் ரேஸ் பார்ட்டீங்க ?


moorthy moorthy
ஆக 14, 2025 20:38

super


தாமரை மலர்கிறது
ஆக 14, 2025 20:25

ஐம்பது சதவீத எத்தனால் கலந்தால் கூட நாட்டிற்கு பயன் தான். என்ஜின் வீணாகிவிடும் என்ற வதந்தியை நம்பினால், உயர்தர பெட்ரோலை போடுங்கள். இதையெல்லாம் நாட்டிற்காக மக்கள் செய்யும் சிறந்த சேவையாக கருதவேண்டும்.


புதிய வீடியோ