உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பி.எம்.டி.சி., ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து போலீசார் பயிற்சி

பி.எம்.டி.சி., ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து போலீசார் பயிற்சி

பெங்களூரு: பெங்களூரு போக்குவரத்து போலீசார், பி.எம்.டி.சி., ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சியை துவக்கி உள்ளனர்.இது தொடர்பாக, போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் அனுஜித் கூறியதாவது:ஆண்டுதோறும், பி.எம்.டி.சி., பஸ்களால் ஏற்படும் சாலை விபத்துகளில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர். ஓட்டுனர்களின் அதிவேகம், சிக்னல் ஜம்ப் என, பல விதங்களில் போக்குவரத்து விதிகளை மீறுவதே, விபத்துகளுக்கு காரணமாகின்றன.எனவே போக்குவரத்து போலீஸ் துறை, பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சியை துவக்கி உள்ளது. தினமும் 50 ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 12,000 ஓட்டுனர்களுக்கும் நாங்கள் பயிற்சி அளிப்போம். இதுவரை 3,000 ஓட்டுனர்கள் பயிற்சியை முடித்துள்ளனர்.பாதுகாப்பாக, கவனமாக பஸ் ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது, விபத்துகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிகள், பெண்கள், சிறார்களின் பாதுகாப்பான பயணம் என, அனைத்து விஷயங்கள் குறித்தும், பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை