உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் படகு கடலில் மூழ்கியது; 13 பேர் பலி

மும்பையில் படகு கடலில் மூழ்கியது; 13 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பை அருகே, 100க்கும் மேற்பட்டோருடன் கடலில் சென்ற படகு, இன்னொரு படகு மோதியதில் கடலில் மூழ்கியது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். 103 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது.மும்பையில் இருந்து சுற்றுலாப்பயணிகள் விரும்பும் எலிபென்டா தீவுக்கு நீல் கமல் என்ற படகு இன்று மாலை 4 மணிக்கு சென்று கொண்டிருந்தது. 100க்கும் மேற்பட்டோர் படகில் இருந்தனர். அப்போது அந்த படகின் மீது அதிவேகப்படகு மோதியது.இதில், சுற்றுலாப்பயணிகள் சென்ற படகு மூழ்க ஆரம்பித்தது. படகு ஊழியர்கள், அவசர உதவி கோரி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு கடற்படை கப்பல் மற்றும் கடலோர காவல் படையின் சுபத்ரா குமாரி சவுகான் படகு ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இதில், 103 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது என்று மாநில முதல்வர் சட்டசபையில் தெரிவித்தார். உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பாமரன்
டிச 18, 2024 22:18

ஓ மை காட்.. . ஒரு முக்கிய சுற்றுலா தளத்துக்கு செல்லும் பாதையில் எப்படி பயணிகள் போட் மற்றும் ஸ்பீடு போட் ரெண்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது... நாளை முதல் ப்ளேம் கேம் ஸ்டார்ட் ஆகும்... வெயிட் பண்ணுவோம்... மேலும் உயிர்சேதம் இல்லாமல் இருக்க பிரார்த்திப்போம்...


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 18, 2024 19:08

மும்பை கூட்டணி ஆட்சி என்ன செய்து கொண்டு இருக்குது


N Sasikumar Yadhav
டிச 18, 2024 19:59

வேங்கைவயல் குடிநீரில் மலத்தை கலந்தபோது திருட்டு திராவிட மாடல் என்ன செய்ததோ அதை செய்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை