உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆற்று நீரில் இறந்து கிடந்த யானையின் உடல் மீட்பு

ஆற்று நீரில் இறந்து கிடந்த யானையின் உடல் மீட்பு

பாலக்காடு; பாலக்காடு அருகே, ஆற்றில் கரை ஒதுங்கிய காட்டு யானையின் உடல் மீட்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே உள்ள வன எல்லையோர பகுதி பாலக்கயம். இங்குள்ள, இரும்பாம்முட்டி பகுதியில், காட்டு யானையின் உடல் ஆற்றில் கரை ஒதுங்கி கிடப்பதை, பகுதியில் பணிக்கு சென்ற தொழிலாளிகள் கண்டனர்.தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் இருந்து, யானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். வனத்துறையின் கால்நடை மருத்துவர் டேவிட் ஆபிரகாம் தலைமையில் பிரேத பரிசோதனை செய்து, யானையின் உடலை அடக்கம் செய்தனர்.வனத்துறை அதிகாரி கூறுகையில், 'ஆற்றில் இறந்து கிடந்த பெண் யானைக்கு 15 வயதிருக்கும். மலை மேல் இருந்து கால் தவறி விழுந்ததில் இறந்திருக்கலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை