உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிணற்றில் இறந்து கிடந்த பாதுகாவலரின் உடல் மீட்பு

கிணற்றில் இறந்து கிடந்த பாதுகாவலரின் உடல் மீட்பு

பாலக்காடு; பாலக்காடு நகரில், கிணற்றில் பாதுகாவலர் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தோலன்னூர் மணியம்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 57. இவர், பாலக்காடு அரசு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வீட்டில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், அந்த வீட்டின் கிணற்றில் பாதுகாவலர் உயிரிழந்த நிலையில் கிடப்பதை நேற்று காலையில், அப்பகுதிக்கு வேலைக்கு சென்றவர்கள் கண்டனர்.தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த பாலக்காடு டவுன் தெற்கு எஸ்.ஐ., ஹேமலதா மற்றும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, இறப்புக்கான காரணம் என்னவென்று தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை