உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் தொடங்கிய வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நாளில் 50 பள்ளிகளுக்கு பறந்த டில்லி போலீஸ்

மீண்டும் தொடங்கிய வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நாளில் 50 பள்ளிகளுக்கு பறந்த டில்லி போலீஸ்

புதுடில்லி; தலைநகர் டில்லியில் ஒரே நாளில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.டில்லியில் மால்வியா நகரில் பிரபலமான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ மெயில் மூலம் மிரட்டல் வந்தது. பள்ளி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் உதவியுடன் பள்ளிக்கு வந்த போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப் படவில்லை. இதுவெறும் மிரட்டல் மட்டுமே என்று தெரிய வந்தது. இதேபோல், கரோல் பாக் பகுதியில் உள்ள மற்றொரு பள்ளிக்கும் இ மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அதுவும் வெறும் மிரட்டல் என்று தெரிய வந்தது. இதுதவிர, மேலும் 48 பள்ளிகள் என இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுககப்பட்டுள்ளது.முதலில் 2 பள்ளிகளுக்கும் அதன் பின்னர் 48 பள்ளிகளுக்கும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் டில்லியில் ஆக.18ம் தேதி ஒரே நாளில் 32 பள்ளிகளுக்கு இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ManiMurugan Murugan
ஆக 20, 2025 20:39

கவனம் தேவை இதே போல் தான் திருப்பரங்குன்றம் பிரச்சனை ஆரம்பித்து விமானநிலையம் இறுதியில் பகல்ஹாம் கவனம் தேவை


Barakat Ali
ஆக 20, 2025 14:40

இது உள்துறையின் தோல்வியே .......


என்னத்த சொல்ல
ஆக 20, 2025 16:37

அப்படி சொன்னால் நீங்கள் ஆன்டி நேஷனல். திமுக தான் காரணம்னு சொன்னீங்கன்னா, நீங்கள் ஒரு தேசியவாதியாக கருதப்படுவீர்கள்.


சமீபத்திய செய்தி