உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு

டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைகேட்பு பக்கத்தில், டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10ம் தேதி டில்லி செங்கோட்டையில் உமர் என்பவன் ஓட்டி வந்த கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினான். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். தலைநகரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ குழு அமைத்து விசாரித்து வருகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் டாக்டர்கள் போன்ற உயர்நிலையில் உள்ளவர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. மேலும், இது தொடர்பாக அடுத்தடுத்து டாக்டர்கள் சிக்கி வருகின்றனர். கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து டில்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைகேட்பு பக்கத்தில், டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல, சென்னை, கோவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள விமானநிலையங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இது குறித்து டில்லி போலீசார் கூறுகையில், 'நேற்று மாலை 4 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், டில்லி விமான நிலையத்தின் 3வது முனையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு தான் அது புரளி என தெரியவந்தது. இதேபோல, பிற பகுதியில் உள்ள விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை