UPDATED : மே 01, 2024 12:34 PM | ADDED : மே 01, 2024 09:06 AM
புதுடில்லி: தலைநகர் டில்லி மற்றும் நொய்டாவில் 80க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.டில்லியின் சாணக்யாபுரியில் உள்ள சான்ஸ்கிரிதி பள்ளி, கிழக்கு டில்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள மதர் மேரி பள்ளி மற்றும் துவாரகா பகுதியில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளிக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e9qhgk54&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து டில்லி மற்றும் நொய்டாவில் உள்ள ஏராளமான பள்ளிகளும், தங்களுக்கும் இதேபோன்று மிரட்டல் வந்ததாக போலீசில் புகார் அளித்தன. இதுவரை 80க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து, வெடிகுண்டை தேடினர். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டாலும் இதுவரை சந்தேகப்படும்படியாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.மதர் மேரி என்ற பள்ளியில் மாணவர்களுக்கு தேர்வு நடந்தது. இமெயில் மூலம் மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, தேர்வை பாதியில் நிறுத்திவிட்டு அவசரம் அவசரமாக மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஊழியர்களும் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பெற்றோர்களை வரவழைத்த பள்ளி நிர்வாகம், குழந்தைகளை அவர்களுடன் அனுப்பி வைத்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசாருடன் கவர்னர் சக்சேனா ஆலோசனை நடத்தினார். இதுவரை சந்தேகப்படும்படியான பொருள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், யாரும் பீதி அடைய வேண்டாம் என டில்லி அரசும், போலீசாரும் கேட்டுக் கொண்டுள்ளனர். கவர்னர் நேரில் ஆய்வு
இச்சம்பவம் தொடர்பாக மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு கவர்னர் வினய்குமார் சக்சேனா நேரில் சென்று ஆய்வு செய்தார். இது பற்றி கவர்னர் கூறுகையில், ''டில்லி போலீசார் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதை மக்களுக்கு உண்ர்த்தவே நேரில் வந்தேன். மிரட்டல் விடுத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். மேலும், சம்பவம் தொடர்பாக உள்துறை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார்.